![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/12/20/a28.jpg?itok=p78DL_YY)
இலங்கையின் முன்னணி மூலிகை பராமரிப்பு வர்த்தகநாமமான சுவதேசி, உலகில் உள்ள ஒரு உன்னதமான பழத்தின் பசுமையான கூறுகளின் அடிப்படையில் குழந்தைகளுக்கான தனது புதிய மூலிகை சவர்க்காரமான “கொஹம்ப பேபி அவகாடோ” வினை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
சுதேசியின் “அவகாடோ” பேபி சவர்க்கரமானது அவகாடோ மற்றும் பிற மூலிகைக் கூறுகளின் கலவையினால் தயாரிக்கப்படுகிறது. இது குழந்தையின் மென்மையான தோலுக்கு இனிமையான மணம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது.
“சுவதேசி 80 ஆண்டுகளுக்கும் மேலாக மூலிகை பொருட்கள் தயாரிப்பின் செழுமையான வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், இலங்கை வர்த்தகநாமம் என்ற வகையில், 80 ஆண்டு கால நம்பிக்கையுடன் மூலிகை நன்மைகளுக்கான உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு வழங்கும் சிறந்த தயாரிப்புகளை வழங்க நாங்கள் உண்மையிலேயே கடமைப்பட்டுள்ளோம். பிரதானமாக “கொஹம்ப” அடிப்படையிலான தயாரிப்புகளுடன் அவகாடோ சவர்க்காரத்தை சேர்ப்பதன் மூலம், எமது தயாரிப்பு வரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் எமது வழங்கல்களில் புதிய நிலைக்கு முன்னேறுகின்றோம்.
எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் 100% தாவர உள்ளீடுகளைப் பயன்படுத்தி முழுமையான ஆராய்ச்சியுடன் தயாரிக்கப்படுகின்றன என்றும், உற்பத்தி செயல்முறை முழுவதும் மிக உயர்ந்த தரமான இணக்கப்பாட்டை உறுதிசெய்கிறோம் என்றும் நாங்கள் உறுதிப்பட தெரிவிக்கின்றோம்,” என்று Swadeshi Industrial Works இன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
புதிய கொஹம்ப பேபி அவகாடோ சவர்காரத்தில் வேம்பு, அவகாடோ சாரு மற்றும் ஒலிவ் எண்ணெய் ஆகியவை அடங்கியுள்ளதுடன், அவை நன்கு அறியப்பட்ட தூய்மையாக்கல், ஈரலிப்பை வழங்கல் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் காரணமாக இயற்கையான தோல் பராமரிப்பில் தலைமுறைகளாக பயன்படுத்தப்படுகின்றன.
அவகாடோ சாரு சிறந்த தோல் நீரேற்றம் மற்றும் ஈரலிப்பு வழங்கும் உள்ளீடுகளில் ஒன்றாகும். இதில் இயற்கையான விட்டமின்கள் A , D மற்றும் E மற்றும் குழந்தையின் சருமத்துக்கு ஊட்டமளித்து, ஈரலிப்பை வழங்கும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.