![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/12/27/a27.jpg?itok=LnXHf7No)
தீக்குச்சிகள் எவ்வாறு உரசியதும் தீயாக உருவாகின்றது?
தலைக்கனம் உள்ளவன் அவனை பாதுகாத்தவனை உரசி பார்த்தால் தலைக்கணம் உள்ளவன் எரிந்து சாம்பலாகிறான் என்ற உயர்ந்த தத்துவத்தை தீப்பெட்டி நமக்கு உணர்த்துகிறது.
தீப்பெட்டி உற்பத்தியில் வெவ்வேறு இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் தீப்பெட்டி பயன்படுத்தப்படும் ஒவ்வொரு இரசாயனத்திற்கும் சில பயன்கள் உள்ளன.
தீப்பெட்டி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயன வகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். பைன் மர குச்சிகளை வலுபடுத்த அம்மோனியம் பொஸ்பேட் மற்றும் பாரஃபின் மெழுகு பயன்படுத்தப்படும். தீக்குச்சியின் தலையில் உள்ள இரசாயன கலவை பொட்டாசியம் குளோரேட் மற்றும் ஆண்டிமனி ட்ரைசல்பைட். தீப்பெட்டியின் உராய்வு அட்டையை தயாரிக்க பொஸ்பரஸ் மற்றும் சல்பர் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படும். உராய்வை அதிகரிக்க கண்ணாடி தூள் சேர்க்கப்படும்.
தீக்குச்சியின் தலையில் உராயும் பகுதியில் சிவப்பு பொஸ்பரஸ் மற்றும் கண்ணாடி தூள் ஆகியவை பயன்படுத்தப்படும். தீக்குச்சியின் தலை துத்தநாக ஒக்ஸைட் மூலம் வண்ணம் கொடுக்கப்படும்.
தீக்குச்சி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
முதலில், மர குச்சிகள் தயாரிக்கப்பட்டு அம்மோனியம் பொஸ்பேட்டில் ஊறவைக்கப்பட்டு பின்பு உலர்த்தப்படும். பிறகு, அக்குச்சிகள் எளிதாக எரிவதற்கு சூடான பாரஃபின் மெழுகில் ஊறவைக்கப்படும்.
தீக்குச்சிகள் கன்வேயர் பெல்ட்டுக்கு மாற்றப்படுகின்றன, அங்கு குச்சிகள் சீராக அடுக்கப்பட்டு பின்னர் இரண்டு வேதிப்பொருட்களைக் கொண்ட தொட்டிகளுக்கு நகர்த்தப்படும், ஒன்று அடித்தளத்திற்கும் அடுத்து தீக்குச்சியின் தலைக்கும் வேதி பொருட்களை பூசும். பின்னர், தீக்குச்சி உலர வைக்கப்படும்.
தீக்குச்சி எவ்வாறு எரிகிறது?
தீக்குச்சியின் தலையில் உள்ள பொட்டாசியம் குளோரேட்டும் உராய்வு அட்டையில் உள்ள பாஸ்பரசும் வினை புரிவத்தின் காரணமாக தீக்குச்சி பற்றி எரிகிறது. தீக்குச்சியை சொரசொரப்பு உள்ள அட்டையில் உராய செய்யும் பொழுது பொஸ்பரஸ் மற்றும் குளோரேட் கலவை ஒரு சிறிய அளவில் வெடிக்கும். இதன் மூலம் தீக்குச்சி பற்றி எரிகிறது.
நளீம் லதீப்
சாய்ந்தமருது- 11