![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/01/24/a30.jpg?itok=Yln9vOhA)
ஆடைப் பராமரிப்பில் 135 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கட்டியெழுப்பியுள்ள சன்லைட், சன்லைட் கெயார் நெட்சுரல்ஸ் எனும் புதிய சலவை உற்பத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேங்காய் நீர், வேம்பு மற்றும் லெவன்டர் போன்ற இயற்கை உட்பொருட்களுடன் கூடிய சன்லைட் கெயார் நெட்சுரல்ஸ்ஆடைகளை நன்றாக சுத்தம் செய்வதோடு, ஆடைகளின் ஆயுளை நீடித்திட உதவுகின்றது.
ஆடைகளை ஒவ்வொரு முறையும் சலவை செய்யும்போது ஆடைகள் பாதிப்படையக் கூடும். அவற்றை நீண்டகாலம் பாதுகாக்க, சரியான முறையில் நாம் சலவை செய்ய வேண்டும்.
சன்லைட் கெயார் நெட்சுரல்ஸ் ஆடைகளை நுட்பமாகச் சுத்தம் செய்து, ஆடைகளை நன்றாகப் பராமரித்து, அவற்றின் ஆயுளை நீடிக்க உதவுகின்றது.
புதிய சன்லைட் கெயார் நெட்சுரல்ஸில் தேங்காய் நீர் மற்றும் வேப்பம் இலைச்சாறு ஆகியன பிரதான உட்பொருட்களாக அடங்கியுள்ளன. தேங்காய் நீர், இயற்கையாகவே கன்டிஷனிங் செய்யும் தன்மையை கொண்டுள்ளதாகவும், அத்துடன் வேம்பு கிருமிகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் மூலப்பொருளாகவும் காலங்காலமாக அறியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே, சன்லைட் கெயார் நெட்சுரல் ஆடைகளின் நூல் இழைகளை ஆழமாக சுத்தப்படுத்தி, சிறந்த பராமரிப்பை அளிப்பதோடு ஆடைகளின் நீண்டகால ஆயுளை உறுதிசெய்ய உதவிடும். புதிய சன்லைட் கெயார் நெட்சுரல்ஸில் சேர்க்கப்பட்டுள்ள லெவன்டர் நறுமணம், இயல்பாகவே புலன்களை அமைதிப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. இது ஆடைகளுக்கு நல்ல நறுமணத்தை வழங்குகின்றது.
சுற்றுச்சூழல் மீதாக அக்கறை உணர்வு உலகளாவிய ரீதியில் வேகமாக அதிகரித்துச் செல்லும் நிலையில், நுகர்வோர் அதிகமான அளவில் இயற்கை தயாரிப்புகளை தீவிரமாக நாடி வருகின்றார்கள். புதிய சன்லைட் கெயார் நெட்சுரல்ஸில் மேம்பட்ட இயற்கைத் தன்மையை வழங்குவதுடன், சோப் (Soap), டிட்டேர்ஜன்ட் பவுடர் (Detergent) மற்றும் லிக்குயிட் (Liquid) ஆகிய மூன்று வடிவங்களில் சந்தையில் கிடைக்கிறது.