![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/02/07/a28.jpg?itok=i_fvV9QR)
2020 ஆம் ஆண்டில் நாட்டில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதேசிய பொதுவிரைவுத் தகவல் (QR) குறியீடான LANKAQR தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல் அதனை ஏற்றுக்கொள்வது மற்றும் பாவனையை மேம்படுத்தல் ஆகியன தொடர்பில் சம்பத் வங்கி மீண்டும் ஒருமுறை இலங்கை மத்திய வங்கியுடன் கைகோர்த்துள்ளது.
நுகர்வோர் தமது நாளாந்த கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளின்போது LANKAQR இன் பாவனையை முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் Dining Capsule இல் 2-நாள் ஊக்குவிப்பு முன்னெடுப்பு செயல்பாட்டை சம்பத் வங்கி மேற்கொண்டது.
இந்த முயற்சி தொடர்பான ஆரம்பவைபவத்தில் இலங்கை மத்தியவங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகளுக்கான பணிப்பாளரான தர்மசிறி குமாரதுங்க சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரான நந்தd பெர்னாண்டோ சம்பத் வங்கியின் தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியும் குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியுமான தாரக ரண்வல மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் சமூகமளித்திருந்தனர்.
மேற்குறிப்பிட்ட ஊக்குவிப்பு செயல்பாடு முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் Dunhinda Colombo, Roots, Grand Monarch, Street Wok, Lavinia, Spice Junction, Giovanni’s Pizza al Taglio மற்றும் Box Bar ஆகிய உணவகங்களில் LANKAQR வசதிகொண்ட டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கு 25% பணமீளளிப்பு சலுகையையும் வங்கி வழங்கியுள்ளது.
ைபணவடிவிலான புழக்கத்தைக் குறைத்து டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளை மேற்கொள்ளும் சமூகத்தை தோற்றுவிப்பதற்கான இலங்கை மத்திய வங்கியின் நோக்கத்திற்கு அமைவாக தேசிய பொதுவிரைவுத் தகவல் குறியீட்டைஉள்வாங்கிக் கொள்வதை வணிகர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்கு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் உரிமம் பெற்ற விசேட வங்கிகள உரிமம் பெற்ற நிதிநிறுவனங்கள் தொலைதொடர்பாடல் பங்காளர்கள் மற்றும் நிதியியல் தொழில்நுட்பநிறுவனங்கள் பலவும் கைகோர்த்துள்ளன.