![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/02/14/a29.jpg?itok=3YhyFtwr)
கொழும்பில் வாகனத் தரிப்பிடம் என்பது நகரத்துக்கு வரும் அனைத்து வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகனச் சாரதிகளுக்கு காணப்படும் முக்கியமான கரிசனையாகும். இல 75, ஹைட்பார்க் கோர்னர், கொழும்பு 02 என்ற முகவரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘ஹைட்பார்க்கிங்’ இதற்கு சிறந்த தீர்வை வழங்குகிறது.
‘ஹைட்பார்க்கிங்’ இல் கொழும்பின் மையப் பகுதியில் எவ்வித தொந்தரவும் இன்றி, பாதுகாப்பான முறையில், மணித்தியால ரீதியில், தினசரி ரீதியில், இரவு அடிப்படை என போட்டியான கட்டணத்தில் சகல விதமான வாகனங்களையும் நிறுத்த முடியும். டவுன்ஹோல், கொள்ளுப்பிட்டி, காலிமுகத்திடல், புறக்கோட்டை என வாகன நெரிசல் நிறைந்த, வரையறுக்கப்பட்ட வாகனத் தரிப்பிட வசதிகளைக் கொண்ட பகுதிகளுக்குச் செல்ல முச்சக்கரவண்டிகளை உடனடியாக வாடகைக்கு அமர்துவதற்கான மேலதிக வசதியும் உள்ளது. ‘ஹைட்பார்க்கிங்’ இல் நாளாந்த மற்றும் நீண்டநாட்கள் வாகனத்தை நிறுத்துவதற்கான இடத்தை ஒதுக்குவதற்கும், வெய்யில் மற்றும் மழை போன்ற கடுமையான இயற்கைக் காரணிகளிலிருந்து வாகனங்களைப் பாதுகாக்கக் கூடிய வசதிகளும் காணப்படுகின்றன.
இதற்கு மேலதிகமாக 24x7 நேரமும் காவலாளிகள் இருப்பதுடன், குறித்த வளாகம் சிசிரிவி கமராக்களால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும். தெளிவாகக் குறிக்கப்பட்ட தரிப்பிட ஒதுக்கீடுகள் மற்றும் சிறிய வாகனங்களுக்காக வரையறுக்கப்பட்ட பகுதிகள் வினைத்திறனான மற்றும் ஒழுக்கமான தரிப்பிட தளவமைப்பை உறுதி செய்கின்றன.
‘ஹைட்பார்க்கிங்’ ஆனது டேவிட் பீரிஸ் குழும கம்பனியின் ஒரு நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடெடினால் முகாமைத்துவம் மற்றும் இயக்கப்படுகிறது.