![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/02/21/a17.jpg?itok=aYkloMQo)
யானை காட்டில் வாழும் மிருகமாகும்.
இது ஞாபகசக்தியுள்ள மிருகமாகும்.
யானையின் கால்கள் உரல்போல் இருக்கும்.
இதன் காதுகள் சுளகுபோல் இருக்கும்.
யானையின் கண்கள் மிகச் சிறியவை.
யானை தும்பிக்கையால் மரங்களை தூக்கிச் செல்லும்.
இது கறுப்பு நிறமுள்ள மிருகமாகும்.
யானையின் வால் குஞ்சம் போன்று காணப்படும்.
யானை இலை, குலை, கரும்பு என்பவற்றை விரும்பி உண்ணும்.
யானையின் வயிறு பானை போன்று காணப்படும்.
இலங்கையில் யானைகளுக்கென பின்னவலயில் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
யானையை செலுத்துபவன் பாகன் என அழைப்பர்.
அ. பாத்திமா முப்லிஹா,
தி/கிண்ணியா முஸ்லிம் பாடசாலை,
கிண்ணியா 06.