காப்புறுதி சேவைகளை வழங்குவதில் இலங்கையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவரும் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் (அலியான்ஸ் லங்கா), நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு குளிரூட்டி உபகரணமொன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது.
நீர்கொழும்பு பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் மருத்துவ சிகிச்சைகளுக்கான ஒரு முக்கியமான வைத்தியசாலையாக நீர்கொழும்பு மாவட்ட பொதுவைத்தியசாலை திகழ்ந்து வருவதுடன், நீர்கொழும்பையும், சுற்றுப்புற கிராமங்களையும் சேர்ந்த நோயாளர்களுக்கு சேவைகளை வழங்கும் பிரதான சிகிச்சை மையமாகவும் அமைந்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் ஆகியவற்றுக்கு தனது சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வாரந்தோறும் 200 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் மற்றும் 150 குருதிக் கொடையாளிகளுக்கு சேவைகளை ஆற்றிவரும் வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இக் குளிரூட்டல் இரத்த சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரத்த வங்கிகள் தமது சேவையின் தரத்தை பேணுவதற்கு குளிரூட்டப்பட்டிருப்பது மிகவும் அத்தியாவசியமானது. மேம்படுத்துவதற்கு இரத்தவங்கியின் ஆற்றலை மேம்படுத்தும் இந்த உபகரணமானது அதன் நோயாளர்கள் மற்றும் குருதிக் கொடையாளிகளுக்கான பராமரிப்பு மற்றும் உதவியை இன்னும் மகத்தான மட்டங்களுக்கு எடுத்துச் செல்ல இரத்த வங்கிக்கு உதவும்.
அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்காலிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான மங்கள பண்டார அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் சந்தை முகாமைத்துவத்திற்கான உதவிப் பொது முகாமையாளரான சமந்த குணவர்த்தன மற்றும் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் ஏனைய பல பிரதிநிதிகள் முன்னிலையில் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கானிசுப்பிரமணியம் இந்த உபகரணங்களை கையளித்தார்.