![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/02/28/a30.jpg?itok=laVUo4yC)
முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனமான INSEE 20 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய மற்றும் பங்களிப்புச் செய்த பணியாளர்களைப் பாராட்டி அதன் வருடாந்த சிரேஷ்டத்துவ விருது விழாவில் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கம்பனிக்காக அர்ப்பணிப்புடன் நீண்டகாலம் சேவையாற்றிய ஊழியர்ககளின் அர்ப்பணிப்பான பணி மற்றும் கடமையுணர்வு என்பவற்றைப் பாராட்டுவதன் அடையாளமாக INSEE அதன் 61 பணியாளர்களுக்கும் தங்க சவரண்களை வழங்கியது. இதனைப் பெற்றவர்களில் 46 பேர் 20 வருடத்தைப் பூர்த்தி செய்திருப்பதுடன் 15 பேர் 25 வருடங்களுக்கும் மேலான அர்ப்பணிப்பான சேவையைப் பூர்த்திசெய்துள்ளனர்.
தொற்றுநோய் காரணமாக சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைக் கருத்தில் கொண்டு விருதுகளை வென்றவர்களின் குடும்பத்தவர்கள் மெய்நிகராக இணைந்து இந்நிகழ்வைக் காணும் வகையில் INSEE சீமெந்து ஏற்பாடு செய்திருந்தது. புத்தளம் சீமெந்து தொழிற்சாலையிலிருந்து 24 பணியாளர்களும் ருஹ{னு சீமெந்து தொழிற்சாலையிலிருந்து 31 பணியாளர்களும் கொழும்பு அலுவலகத்திலிருந்து 06 பணியாளர்களும் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர்.
விருது பெற்றவர்களில் உற்பத்தி பொதியிடல் பகுதி சந்தைப்படுத்தல் கொள்முதல் சரக்குப் போக்குவரத்து பராமரிப்பு மற்றும் தர உறுதிப்படுத்தல் திணைக்களம் போன்ற செயற்பாட்டுக் குழுக்களின் பணியாளர்கள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.