இலங்கையில் F19 PRO வை அறிமுகப்படுத்தியது OPPO | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் F19 PRO வை அறிமுகப்படுத்தியது OPPO

புதுமையான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அணியும் சாதனங்களின் முன்னோடியான OPPO, தனது அதிநவீன F தொடர் சாதனமான F 19 Pro கையடக்கத் தொலைபேசியை மார்ச் 15, 2021 அன்று அறிமுகப்படுத்தியது. இக்கையடக்கத் தொலைபேசியின் பல்வேறு புதுமையான மேம்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமது படைப்பாற்றல்கள் கொண்ட கதைகளை சொல்ல சக்திவாய்ந்த கருவியைத் தேடும் படைப்பாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான எல்லையற்ற வீடியோ பதிவு ஆற்றலை இது கொண்டுள்ளது.

இவ்வெளியீட்டு நிகழ்வு, ‘F19 PRO STYLISH LAUNCH NIGHT’ (‘F19 PRO ஸ்டைலான அறிமுக இரவு) எனும் எண்ணக்கருவில் இடம்பெற்றதோடு, OPPO ஶ்ரீ லங்காவின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதிலுமிருந்து சுமார் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் பாரிய பங்களிப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வு, ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றது.

OPPO தரக்குறியீட்டின் தூதுவரான, TheVoice பயிற்சியாளரும், விருது பெற்ற பாடகருமான உமாரியா சின்ஹவம்ச மற்றும் நடன இயக்குனர் ரமோத் மாலக, தடகள வீரரும், உடற்பயிற்சியாளருமான சூரி மற்றும் பாடகரும், நடிகருமான கயான் குணவர்தன உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் ஒன்லைன் பிரபலங்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இப்புதிய புரட்சிகர கையடக்கத் தொலைபேசியில் 48MP பிரதான கெமரா, 8MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் கெமரா, 2MP மெக்ரோ கெமரா, 2MP மொனோ கெமரா ஆகிய 4 கெமராக்களும் இணைந்து உருவாக்கும் குவாட் கெமரா தொகுதியானது, மதிப்பிட முடியாத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இந்த வசதியின் மூலம் சிறந்த வண்ண ஆழம், உயர் தெளிவை பெற முடிவதோடு, பயனர்கள் விளையாட்டிற்காக எப்போதும் தயாராக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இன்ஸ்டாகிராம் செல்பிக்களுக்காக எப்போதும் தயார் நிலையிலுள்ள 32MP முன்பக்க கெமராவையும் இது கொண்டுள்ளது.

Comments