![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/03/21/a34.jpg?itok=ZVvFY9D2)
இலங்கையின் முன்னணி வாடகை வாகன சேவை வழங்குனர்களும் கடந்த 33 ஆண்டுகளாக, இலங்கையின் இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் பெரும் நம்பிக்கையையும் பெற்றுள்ள நிறுவனமான கங்காரு கெப்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனமானது, கொவிட் 19 பரவலில் இருந்து தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்காக சில முக்கியமான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
செனிடைசர் வழங்குவது, தொடுகை அற்ற உடல் வெப்பமானி பயன்பாடு மற்றும் கங்காரு கெப்ஸுடன் பதிவுசெய்துள்ள ஒவ்வொரு சாரதிக்கும் முகக் கவசம் வழங்குவது என்பன இவற்றுள் அடங்கும். கங்காரு கெப்ஸின் அனைத்துச் சாரதிகளும் அனைத்து வாடிக்கையாளர்களினது பாதுகாப்பு குறித்து அவதானமாக இருக்குமாறும் சுகாதார வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமது ஒவ்வொரு பயணத்தின் போதும் வாடிக்கையாளர்களது உடல் வெப்பநிலை அளவிடப்படுவதோடு செனிடைசரும் வழங்கப்படும். பயணம் நிறைவடைந்த பின்னர்,வாகனம் செனிடைசரால் சுத்தப்படுத்தப்படுவதன் மூலம் அடுத்த பயணத்தின்போது பயணிக்கும் பயணிகளினதும் சாரதியினதும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. முழுப் பயணத்தின்போதும் சாரதிகள் முகக் கவசம் அணிந்திருக்குமாறும் சுகாதார வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு விதிமுறைகளும் கங்காரு கெப்ஸ் நிறுவனத்தின் உச்சபட்ச முக்கியத்துவம் பெற்றிருப்பதால், தமது ஆரோக்கியத்தில் கரிசனையுள்ள அனைத்து வாடிக்கையாளர்களையும் தமது பயணத் தேவைகளுக்காக கங்காரு கெப்ஸ் நிறுவனத்தை அணுகுமாறு கங்காரு கெப்ஸ் (0112 588588) நிறுவனத்தின் முகாமைத்துவம் கேட்டுக்கொள்கிறது.