![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/03/21/a35.jpg?itok=7jvZqnoV)
டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட் அண்மையில் DPMC மாத்தறை வேலைத்தளத்தை அண்மையில் திறந்து வைத்ததுடன், மேல் மாகாணத்துக்கு வெளியே கம்பனியால் செயற்படுத்தப்படும் முதலாவது வாகன சேவை நிலையமாக இது அமைந்துள்ளது.
மாத்தறை நகரத்துக்கு மிகவும் அண்மையில் காலி வீதி, தலரம்ப, கம்புறுகமுவ என்ற பகுதியில் அமைந்துள்ள இந்த வேலைத்தளத்தின் ஊடாக அனைத்து பஜாஜ், மோட்டார் சைக்கிள்களுக்கான பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மற்றும் அனைத்து ரக வாகனங்களையும் கழுவுதல், விரவான ஆய்வு போன்ற சேவைகள் மேற்கெள்ளப்படும்.
மடபாத்த, பிலியந்தலை ஆகிய பகுதிகளில் DPMC இதுபோன்ற வேலைத்தளங்களை செயற்படுத்துகிறது.
புதிய வேலைத்தளம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த DPMC இன் பிராந்திய முகாமையாளர் (கள சேவைகள்) திரு.சன்ன ரவணக்க குறிப்பிடுகையில், “பஜாஜ் வாகனங்களுக்கு விற்பனைக்குப் பின்னரான சேவை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை உயர்ந்த மட்டத்தில் வழங்குவதில் நாம் தொடர்ந்தும் முதலீடு செய்துள்ளோம். தற்பொழுது காணப்படும் இறக்குமதி கட்டுப்பாட்டு சூழ்நிலையில் காணப்படும் வாகனங்களை பராமரிப்பது மற்றும் சேர்விஸ் செய்வது முக்கியமானதாகும். இதனாலேயே எமது உள்ளக நிபுணர்களின் சேவையை எமது சொந்த வேலைத்தளத்தின் ஊடாக நாட்டின் ஏனைய பகுதிக்கும் விஸ்தரித்துள்ளோம். நாடு முழுவதிலும் அமைக்கப்படவிருக்கும் வேலைத்தளத்துக்கு இது முன்னோடியானதாக அமையும் என நம்புகின்றோம்” என்றார்.
இந்த வளாகத்தில் அமைந்துள் பஜாஜ் அசல் உதிரிப்பாக காட்சியறை மற்றும், பதிவு செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்தல் அல்லது மாற்றீடு செய்வதற்கான ரியசக்வல கிளை என்பவற்றின் ஊடாகவும் வாடிக்கையாளர்கள் சிறந்த சேவையைப் பெறமுடியும்.