காலி ஒல்கொட் மஹா வித்தியாலயத்திற்கு smartboard இனை நன்கொடையாக வழங்கிய vivo | தினகரன் வாரமஞ்சரி

காலி ஒல்கொட் மஹா வித்தியாலயத்திற்கு smartboard இனை நன்கொடையாக வழங்கிய vivo

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, தொடரும் தொற்றுநோய் நிலமையில் சமமான கற்றல் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இலங்கையில் தனது சமூக நலனை நோக்கமாகக் கொண்ட #vivocares முயற்சியினை முன்னெடுத்துள்ளது. இந்த முயற்சியின் கீழ் vivo ஒரு நவீன ஊடாடும் smartboard இனை காலியில் உள்ள முதல் பயனாளியான ‘ஒல்கொட் மஹா ஒல்கொட் மஹா வித்தியாலயத்திற்கு ஒதுக்க முன்வந்தது. இது 1200 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதுடன், ஊடாடும் கற்றல் அலகுகளை ஊக்குவிக்குகின்றது.

#vivocares முயற்சி தொடர்பில் கருத்து தெரிவித்த vivo Sri Lankaவின் பணிப்பாளர் எலிசன் ஜின், "உலகளாவிய மற்றும் சமூக பொறுப்புள்ள வர்த்தகநாமம் என்ற வகையில் உள்நாட்டு சமூகங்களை ஆதரிப்பதிலும், அவர்களை தொழில்நுட்பத்தில் நன்மையால் வலுவூட்டுவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. முழு மனதுடன் சமூகத்திற்கு பங்களிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பாடசாலை சிறார்கள் எந்தவொரு தேசத்தினதும் எதிர்காலமாக இருப்பதால், பள்ளி பாடத்திட்டத்தில் அவர்களின் ஆர்வத்தையும் பங்கேற்பையும் தக்க வைத்துக் கொள்வது அவசியமாகும். இது பாடசாலைக்கு மாணவர்களின் வருகை மற்றும் இடைவிலகல் விகிதங்கள் போன்ற சிக்கல்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் உள்ளடக்கத்துக்கான ஒரு சிறிய படியாகும்,” என்றார்.

ஒல்கொட் மஹா வித்தியாலயத்தின் அதிபர், லலித் மாயாகடுவ கருத்து தெரிவிக்கையில்," எமது பாடசாலையின் வசதியை மேம்படுத்தும் பொருட்டு இந்த smartboard இற்கு பங்களிப்பு செய்தமை தொடர்பில் vivo குழுவிற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இது நிச்சயமாக கற்றலை சுவாரஸ்யம் மிகுந்ததாக மாற்றுவதுடன், இந்த நிச்சயமற்ற காலங்களில் குழந்தைகளுக்கு உற்சாகமாக ஈடுபாட்டுடன் இருக்கவும் உதவும். vivoவின் இந்த முயற்சியானது இளையோரின் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தவும் கிராமப்புற பள்ளிகளில் கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்தவும் உதவும்."

Comments