SeylanPay QR கொடுப்பனவு தீர்வுகள் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

SeylanPay QR கொடுப்பனவு தீர்வுகள் அறிமுகம்

செலான் வங்கி தனது டிஜிட்டல் தயாரிப்பு தெரிவுகளில் புதிய உள்ளடக்கமாக ‘SeylanPay’ QR குறியீட்டின் பிரகாரம் அமைந்த கொடுப்பனவு தீர்வை அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

வங்கியின் பயணத்தில் இந்த அறிமுகம் மிகவும் முக்கிய மைல்கல்லாக அமைந்திருப்பதுடன், பணப்பாவனை இல்லாத, கடதாசி பாவனை இல்லாத மற்றும் கிளைகளின் பாவனை இல்லாத வங்கியியல் மாதிரியை நோக்கிய வங்கியின் தந்திரோபாயப் பயணத்துக்கு வலுச் சேர்ப்பதாகவும், இலங்கையின் கொடுப்பனவு கட்டமைப்புக்கு வளமூட்டுவதாகவும் அமைந்துள்ளது.

SeylanPay அறிமுகம் தொடர்பில் செலான் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “வங்கியியல் மற்றும் நிதியியல் துறையின் எதிர்காலமாக டிஜிட்டல் வங்கியியல் அமைந்துள்ளது. SeylanPay QR வசதியை பல்வேறு நிலைகளில் சௌகரியமாகவும், பாவனையாளருக்கு நட்பான வகையிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதுடன், துறைக்கு சிறந்த உள்ளடக்கமாகவும் அமைந்துள்ளது. ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்கக்கூடியதாக அமைந்திருக்கும். இலங்கையில் டிஜிட்டல் வங்கியியல் துறையில் முன்னோடியாக செலான் வங்கி அமைந்துள்ளதுடன், இணைய மற்றும் மொபைல் வங்கிச் சேவை, இணையக் கொடுப்பனவு கட்டமைப்புகள் மற்றும் விற்பனையாளர் போர்டல் சேவைகள் போன்றவற்றை அறிமுகம் செய்வதில் முன்னோடியாகத் திகழ்ந்து, சகல செலான் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. SeylanPay கொடுப்பனவுத் தீர்வு எமது வாடிக்கையாளர்களின் வேலைப்பளு நிறைந்த வாழ்க்கைக்கு சௌகரியத்தை ஏற்படுத்தும் என்பதுடன், இந்த வாய்ப்பை வழங்குவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

செலான் வங்கியில் நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தற்போது, தமது ஸ்மார்ட்ஃபோன் ஊடாக LANKAQR சான்று பெற்ற விற்பனை நிலையங்களில் டிஜிட்டல் முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

Comments