ஸ்லிம் மக்கள் விருதுகள் 2021 இல் இலங்கை நுகர்வோர் சேவைக்கான வர்த்தக நாமம், மற்றும் இளைஞர்களின் விருப்பத்திற்குரிய வர்த்தக நாமமாக தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமமாக தொடர்ந்து சாதனைக்குரிய 10வது ஆண்டாகவும் டயலொக்கிற்கு வாக்களித்துள்ளனர். இலங்கை பொது மக்களின் மனதில் ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ள வர்த்தக நாமங்களை தெரிவு செய்வதற்காக பொதுமக்களினால் வாக்களிக்கப்படும் மக்கள் விருதுகள் டயலொக் வர்த்த நாமத்திற்கு மகுடம் சூட்டப்பட்டுள்ளது.
தொற்றுநோயை எதிர்கொண்ட கடந்த ஆண்டில், இலங்கையர்கள் தங்கள் தொற்றுநோய் தொடர்பான சவால்களுக்கு உதவுவதற்காக அவர்கள் மிகவும் நம்பிய வர்த்தக நாமத்தை பயன்படுத்தினர்;. கோவிட் - 19 முன்வைக்கும் சமூக சவால்களை எதிர்கொள்வதில் டயலொக்கின் முன்மாதிரியான அர்ப்பணிப்பு மற்றும் அதன் வாடிக்கையாளர்கள், பங்காளர்கள், சமூகங்கள் மற்றும் நாட்டிற்கு ஆதரவளிப்பதில் அதன் அசைக்க முடியாத முயற்சிகளுக்கு மக்கள் வழங்கிய பாராட்டுக்கள் மூலம் அவை அங்கீகரிக்கப்படுகின்றன.
அனைத்து சேவைத் தொழில்களிலும் சிறந்த சேவை வழங்குனரை அங்கீகரிக்கும் ‘ஆண்டின் சிறந்த சேவைக்கான வர்த்தக நாமம்’ விருது, தொழில்நுட்பத்தின் உருமாறும் சக்தியைப் பயன்படுத்தி, டயலொக் வழங்கும் பல்வேறு வகையாக அணுகக்கூடிய சேவைகளுக்கு ஒரு சான்றாகும். இது, இதயத்திலிருந்து சேவையை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புடன், வாடிக்கையாளர் அனுபவத்தையும் சேவை வழங்கல் சிறப்பையும் அதன் நிறுவன நெறிமுறைகளுக்கு மத்தியில் திகழ செய்கின்றது.
ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமம் எனும் விருதானது டயலொக்கின் 10 ஆண்டு கால சாதனையினை நிலைநாட்டியுள்ளது. இலங்கையரின் வாழ்க்கையையும் நிறுவனங்களையும் மேம்படுத்துவதற்கும் வளப்படுத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை வழங்குவதனையும் அங்கீகரித்துள்ளது.
முஸ்லிம் மக்கள் விருதுகளில் வழங்கப்பட்ட 3 விருதுகள் இலங்கை மக்களால் வாக்களிக்கப்பட்டுள்ளதோடு, Brand Finance இனால் இலங்கையின் மிகவும் மதிப்பு மிக்க நுகர்வோர் வர்த்தக நாமத்திற்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பதினால் உணரப்படுவது என்னவென்றால் வர்த்தக நாமத்தின் தொடர்ச்சியாக ஒவ்வொரு இலங்கையரும் ஒன்றிணைக்கப்பட்டனர் என்பதே ஆகும்.