![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/04/25/a25.jpg?itok=ed9QY8XO)
இலங்கையின் மிகவும் பிரபலமான கையக்கத் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன்கள் வழங்குநரான OPPO, தெரண ட்ரீம் ஸ்டார் நிகழ்ச்சியின் பங்காளராக உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளது. 'தெரண ட்ரீம் ஸ்டார்' நிகழ்ச்சியானது இலங்கையர்கள் மாத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகும் என்பதோடு, தற்போது அதன் 10ஆவது சீசன் இடம்பெற்று வருகிறது.
ரியாலிட்டி தொலைக்காட்சி வடிவமைப்பைப் பின்பற்றுகின்ற, பல ஆண்டுகளாக இடம்பெற்று வரும் பாட்டுத் திறனுக்கான போட்டியானது, உபேகா நிர்மணி, உதேஷ் இந்துல, தெவனி இனிம புகழ் ரவீன் கனிஷ்க உள்ளிட்ட பல திறமையாளர்களை வெளிப்படுத்த உதவியுள்ளது. இப்போட்டி, இலைமறை காயாக உள்ள உள்ளூர் இளைஞர்களுக்கு அவர்களின் பாடும் திறனை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய பலர், நடிகர்கள், மாடல்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்களாக அந்தந்த துறைகளில் மிளிரும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தளமானது, OPPO அதன் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உதவும் என்பதோடு, குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த OPPO F19 Pro இதில் அங்கம் வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ‘Dual-View Video Moment’ (‘இரட்டைக் காட்சி வீடியோ தருணம்’) எனும் விடயம் இடம்பெறும் என்பதோடு, இதன் மூலம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் ‘Dual-View Video’ அம்சத்தை காண்பிக்கும் வீடியோவொன்றை பதிவு செய்து காண்பிப்பார்.
இந்த தொடர் 6 மாத காலத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டிணைவு தொடர்பில் OPPO ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி பொப் லி தெரிவிக்கையில், “உள்ளூர் திறமைசாலிகளை அடையாளம் கண்டு வரும், ரிவி தெரணவுடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ” என்றார்.
தெரண ட்ரீம் ஸ்டார் சீசன் 10 ஆனது ஏப்ரல் 10 ஆம் திகதி ஆரம்பித்து ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 7.30 மணி முதல் ஒளிபரப்பாகும்.