இலங்கையில் மிகவும் பிரபலானதும் அதிகம் விரும்பப்படும் குளிர்பானமுமான எலிஃபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த மார்ச் 23ஆம் திகதி நடைபெற்று முடிந்த விருதில் “வருடத்துக்கான குடிபான வர்த்தகநாமம்” ஆக மீண்டும் ஒரு முறை விரும்பப்பட்டுள்ளது.
இது எலிஃபன்ட் ஹவுஸ் கிறீம் சோடாவுக்கு இந்தப் பிரிவில் கிடைத்த தொடர்ச்சியான 15வது வெற்றியென்பதுடன், 2006ஆம் ஆண்டு SLIM- Nielsen மக்கள் விருதுகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இந்த வெற்றியைத் தொடர்ந்தும் தக்கவைத்துவருகிறது.
எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடாவின் இந்த வெற்றியானது இளையவர்கள் தற்பொழுது மிகவும் நுகரும் பிரபல்யம் மிக்க குடிபானத்துக்கான வர்த்தகநாமம் என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறது. எலிஃபன்ட் ஹவுஸ் கிரீம் சோடா பலரின் இதயங்களை ஈர்த்திருப்பதுடன், சந்தையில் மிகவும் கிளர்ச்சியூட்டும், இளைமை மிக்க வர்த்தக நாமமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ஒன்றான SLIM -Nielsen மக்கள் விருதானது, விருதுகளைப் பெறுபவர்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்டவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது மக்களின் குரலை எதிரொலிக்கிறது. இந்த விருது நிகழ்ச்சி இலங்கை மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய வர்த்தகநாமங்கள் மற்றும் ஆளுமைகளை அங்கீகரிக்கிறது. விருதில் பொது மக்கள் நடுவர்களாகவும், தமக்கு விருப்பமான வர்த்தக நாமங்கள் மற்றும் பிரபலங்களை தரப்படுத்தி தீர்ப்புக்களையும் வழங்குகின்றனர்.
நாடு முழுவதிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ள மற்றும் கடல் கலந்த சந்தை என விரிவாக்கப்பட்ட வலையமைப்புடன் கூடிய விநியோகப் பின்னணி, இலங்கையின் கலாசாரத்துடன் எலிஃபன்ட் ஹவுஸ் பிணைக்கப்பட்டுள்ளமையால் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அனேகமாக பெரும்பாலான வீடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.