EVAவின் கிரீன் டீ சாரம் சேர்க்கப்பட்ட மேம்பட்ட சுகாதார அணையாடை | தினகரன் வாரமஞ்சரி

EVAவின் கிரீன் டீ சாரம் சேர்க்கப்பட்ட மேம்பட்ட சுகாதார அணையாடை

EVA வின் புத்தம்புதிய உற்பத்தி வரிசையானது சிறந்த பாதுகாப்பான மாதவிடாய் அனுபவத்திற்காக நுண்ணுயிர் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது

இலங்கையின் முன்னணி சுகாதார அணையாடை வர்த்தகநாமமான EVA, பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தின் போது பாதுகாப்பான, விரும்பத்தகாத வாடையற்ற மற்றும் தொற்று அல்லாத அனுபவத்தை வழங்குவதற்காக கிரீன் டீ சாரம் சேர்க்கப்பட்ட, பக்டீரியா எதிர்ப்பு வலு அடுக்கினைக் கொண்டு மேம்படுத்தப்பட்ட புத்தம்புதிய அடையாணை உற்பத்தி வரிசையை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. பக்டீரியா எதிர்ப்பு அடுக்கானது தொழிற்துறையில் முதன்முதலாக அறிமுகமாக்கப்பட்டுள்ளதுடன், நாட்டில் பெண்களின் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதில் புரட்சிகரமான மாற்றத்திற்கு வழிகோலியுள்ளது.  

உலகெங்கிலும் மாதவிடாய் வயதில் பல பில்லியன் கணக்கான பெண்களும், பெண் பிள்ளைகளும் உள்ள நிலையில், 75மூ ஆனோர் தமது வாழ்நாளில் யோனி நுரைமம், பக்டீரியா தொற்றுக்கள் அல்லது மாதவிடாய் வாடை போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

EVA  சுகாதார அணையாடை உற்பத்திகள் கொண்டுள்ள புதிய பக்டீரியா எதிர்ப்பு அடுக்கு பக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளை ஈர்க்கவும், கொல்லவும் அதிநவீன நுண்ணுயிர் எதிர்ப்பு செயற்பாட்டு தொழில்நுட்பத்தை உபயோகிக்கின்றன. உயிர் வளியேற்ற எதிர்ப்பாற்றல் நிரம்பிய கிரீன் டீ சாரமானது மாதவிடாய் வாடையை இல்லாமல் செய்ய உதவ, பக்டீரியா எதிர்ப்பு அடுக்கினுள் உட்செலுத்தப்பட்டுள்ளது.

மிகவும் உறிஞ்சக்கூடிய பாதுகாப்பு மூலப்பொருளின் 6 அடுக்குகள் மற்றும் மிகவும் கூடுதலான திரவ உறிஞ்சல் முறைமை, உயர்த்தப்பட்ட மையம் மற்றும் வேகமாக உறிஞ்சும் மேற்தாள் ஆகியவற்றைக் கொண்ட இப்புதிய பக்டீரியா எதிர்ப்பு அடுக்கானது 100% மேம்பட்ட உறிஞ்சும் ஆற்றலைக் கொண்டுள்ளதால் பெண்கள் எந்த வேலைகளையும் சௌகரியத்துடனும், நம்பிக்கையுடனும் முன்னெடுக்கும் ஆற்றலை அவர்களுக்கு வழங்குகின்றது.

Comments