![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/04/27/Bus01.jpg?itok=Xzu5oWFO)
துறைசார் முதுவரான கெலும்சேனநாயக்கவை பிரதமநிறைவேற்றதிகாரியாக நியமித்துள்ள ஆர்பிகோஇன்சூரன்ஸ் -MDRT சாதனை புரிந்த இலங்கை காப்புறுதித்துறையின் முதலாவது பிரதமநிறைவேற்றதிகாரி ஆவார்.
இலங்கையின் மிகவும்புத்தாக்கமானதும் மதிப்புவாய்ந்ததுமான காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றான ஆர்பிகோ இன்சூரன்ஸ் பி.எல்.சி ஆனது துறைசார் முதுவரான கெலும் சேனநாயக்கவை 2021 மார்ச் 1ஆம்திகதி தொடக்கம் தமது பிரதமநிறைவேற்றதிகாரியாக நியமித்துள்ளது.
சேனநாயக்க சுமார் 40 வருடங்கள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் உள்ள காப்புறுதி நிறுவனங்களின் அனுபவத்தை வெளிப்படுத்தியவர்.
சேனநாயக்க தனது தொழில்வாழ்க்கையை 1982 ஆம் ஆண்டு தேசிய காப்புறுதி கூட்டுத்தாபனம் தனியார் மயப்படுத்தப்பட்டதும், அதற்கான முகவர் நிலையமாக விளங்கிய மேர்கன்டைல் கிரெடிட்நி றுவனத்தில் ஆரம்பித்தார். இதன் பின்னர் அவர் யூனியன் அசூரன்ஸ் நிறுவனத்தில் இணைந்ததுடன் உதவி பொதுமுகாமையாளராக பதவி உயர்வுபெற்று 2009 ஆம்ஆண்டுவரை சேவையாற்றியதுடன் அதன்பின்னர் அவர் ஈகிள் இன்சூரன்ஸில் (தற்போதைய AIA காப்புறுதிநிறுவனம்)ஆயுள்செயற்பாடுகளுக்கான பொதுமுகாமையாளராக இணைந்துகொண்டார். 2013 ஆம் ஆண்டில் அவர் ஆயுள் செயற்பாடுகளுக்கான பணிப்பாளராக பதவியுயர்வுபெற்றதுடன் இங்கு அவர் செயற்பாடுகள், ஆயுள்காப்பீடு, ஆயுள்சேவை, உரிமைகோரல்கள், உற்பத்தி அபிவிருத்தி, மறுகாப்பீடு, கிளைசெயற்பாடுகள்,கூட்டாண்மை தீர்வுகள் விநியோகம், தொடர்பு நிலையங்கள் போன்ற விரிவான செயற்பாடுகளுக்குபொறுப்பாக நியமிக்கப்பட்டார்.