கசப்பு-1
வரலாற்றில் இடம் பிடித்துள்ள உலகப்புகழ் தலைவர் ஒருவரின் பெயரைக் கொண்டிருப்பவர். எதிர்வரும் நவம்பரில் 59ஆம் அகவைக்குள் நுழைந்து ‘வரிக்குதிரை’ச் சவாரி செய்து புத்தகம் புது புதுக்கவிதைகள் வழங்கப் போகிறவர். நல்ல பாடகர். அவர் கலை, இலக்கியக் குடும்பம் .ஒன்றைச் சார்ந்தவர்; தான் பிறந்த மண்ணை மறக்காது, ‘மாத்தாளை’யையும் பெயருடன் இணைத்துக் துலங்குபவர்.
இந்த மனிதரது தமக்கையார், அப்பெண்மணி கரம் பற்றிய கணவனார், அவர்களுக்குப் பிறந்த வாரிசு அனைவருமே இசையும், இலக்கியமும், ஆய்வும் என்ற மூழ்கி முத்தெடுத்து ஆண்டுகள் பல.
ஆயினும் உங்களில் பலரும் (அதுவும் இளவட்டத்தினர்) அவர்களை முழுமையாக அறியத்தவறி இருப்பீர்கள்.
ஒரு “மாத்தளை ஃபர்வீன்” (எச்.எம்.எம். பவ்ஸூல் ஹனாயா)
ஒரு கலகெதற எம்.எம். ஏ ஹக் மாஸ்டர்,
ஒரு லரீனா அப்துல் ஹக் (திருமதி எம்.எச்.எம். ஃபிர்தௌஸ்)
ஒரு “மாத்தளை கமால்” (எச்.எம்.எம். கமால்) இவரையே ஆரம்பத்திலேயே அடையாளப்படுத்தினேன்.
இந்நால்வரில் கமால் – லறீனா இருவரையும் ஒரு குறிப்பிட்ட வட்டம் அறிந்திருக்க வாய்ப்பு இருந்தாலும், ‘கலகெதற ஹக் மாஸ்டர்” ஃபவ்ஸூல் ஹினாயா” தம்பதி? ஊஹூம்
அதுவும் ‘ஹினாயா’ என்ற பெயர் வெளியில் தெரியாத ஒன்று அவர் “மாத்தளை ஃபர்வின்” என்றே வாழ்நாள் முழுதும் பேனா பிடித்திருந்தார். அதாவது 2014 வரையில் அப்புறம் முற்றும் முழுதுமாக மறக்கப்பட்டு விட்டார் 22க்கும் மேற்பட்ட அவரது தொடர் கதைகளை வெளியிட்ட ‘மித்திரன்’ வாரமலர் கூட தொகையை நினைவில் வைத்திருக்குமோ, சந்தேகம்.
இன்றைய இந்தப்பக்கத்தில் அவர் பற்றிய கசப்பையும் இனிப்பையும் வழங்கவே விருப்பம் . அவர்தம் துணை ஹக் மாஸ்டரை இன்னொரு சந்தர்ப்பத்தில் நிறையத் தகவல்களைச் சேர்த்துக் கொண்டு உங்கள் முன் அழைத்து வருகிறேன்.
“மாத்தளை ஃபர்வீன்” ஆளுமை தன் இலக்கியப் பிரவேசம் பங்களிப்பு அனைத்தையும் தொகுத்த ஒரு விவரக் கொத்தினை வீட்டில் பத்திரப்படுத்தி விட்டே இறைவனது அழைப்புக்கு செவிசாய்த்து விடைபெற்றுச் சென்றுள்ளார்!
இப்படி நான் பதிவது அதிர்ச்சியே! அவர், ஏழாண்டுகளுக்குமுன், 2014ஆகஸ்ட் 08ல் மறைவு. 1955 பெப்ரவரி 25ல் பிறந்து, 59 அகவைகள் வாழ்ந்த வாழ்க்கையில் இலக்கியமாக 45 ஆண்டுகள்!
அவர் வைத்துச் சென்றுள்ள தன் (இலக்கிய) வரலாற்றுப் பதிவேட்டின் சில பந்திகள் புரட்டத் தருகிறேன்.
* நான் 14 வயதிலேயே எழுதத் துவங்கி விட்டேன். முதலில் நான் எழுதிய கையெழுத்துப் பிரதியான கதையின் பெயர் – “கொடுத்து வைத்தவள்’ திகதி 08.11.1969. இதைத் தொடர்ந்து பல கதைகளை’ சுமார் 18 அல்லது 20 கதைகளை, 1974 டிசம்பர்’ வரை எழுதியிருந்தேன். முதலில் பத்திரிகையில் வெளியான தொடர் கதை (அவளும் ஒரு பெண்) எனது 7வது கதையாகும்.
* என் 13- - 14 ஆம் வயதில் “ரஜனி” என்ற புனைப் பெயரில் கே.வி.எஸ். வாஸ் எழுதிய துப்பறியும் கதைகளை வாசிப்பேன். அவர் எழுதிய “வேதாள மாளிகை” (‘ஜோதி’ யில் வந்தது) கதையே என்னை எழுதத் தூண்டியது.
*“இருந்தாலும் இலைமறை காயாக இருந்து நான், 10 வருடங்களின் பின் (வயது 24) ‘சித்ரா’ ‘மித்திரன்’ – ‘ஜனனி’ – ‘ரஞ்சனி’ போன்ற இதழ்கள் மூலமாக எழுத்தாளராக அறிமுகப்படுத்தப்பட்டேன். 08 சிறுகதைகள் 32 தொடர்கதைகள் இதுவரை எழுதியுள்ளேன். என் எழுத்துத் துறைக்கு உறுதுணை புரிந்து தந்தை எச்.எம். மொஹிதீன், என் கதைகளில் பிழை திருத்தங்கள் செய்த சகோதரர் எச்.எம்.எம். கமால் ஆகியோருக்கும் எழுத்துத் திறமையைக் கொடையாக வழங்கிய வல்ல இறைவனுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்”
இதை வாசித்ததும் அபிமானிகளுக்கு அதிசயமும் ஆச்சரியமும் ஏற்படும்.
இலங்கையில் ஒரு பெண்மணி அதுவும் முஸ்லிம் திருமதி 32 தொடர்கதைகள் எழுதி இருக்கிறாரா? நம்பியே ஆக வேண்டும். அவர் வைத்துச் சென்றுள்ள பட்டியல் ஆதாரம் அதுவும் 11 .-04-. 1985ல் ‘மித்திரனின் முதல் தொடர்கதை! 32வது தொடர்கதை 16-.11. 2003ல் ‘ஜனனி’ யில் பட்டியல் இதன் பின்தொடர்ப்படவில்லை. 2003க்குப் பிறகு 11ஆண்டுகள் வாழ்ந்தவர் மேலும் பங்களிப்புச் செய்யாமலா இருந்திருப்பார்?
“மாத்தளை ஃபர்வீன்” உடன் பிறப்பு, “மாத்தளை கமால்” நம் உதவிக்கு வருகிறார்.
“சுமார் 42 தொடர்கதைகள் எழுதி இருந்தார். அவர் காலம் சென்ற பிறகும்
“ஃப்ரெண்ட் ஷிப்” என்ற தொடர்கதை ‘மித்திரன்’ வாரமலரில் தொடர்ந்து பிரசுரமாகிக் கொண்டிருந்தது. ஆனால் என் நெஞ்சைப் பிழிகிற விடயம் என் தமக்கையின் ஒரு தொடர்கதை கூட நூலுருப் பெறவில்லை என்பது!” என்ன சொல்கிறார் கமால்? 42ல் ஒன்றுகூட நூலாக வரவில்லை என்றா...?
அடவெட்கக் கேடே! இலங்கைத் தமிழ் இலக்கியமும் பதிப்பங்களும் இந்தத் தரத்திற்கு இறங்கியே இறங்கிப் போய்விட்டதா? இப்படியொரு இழிநிலை வரலாமா எந்தப் படைப்பாளிக்கும் ஏற்பட வைக்கலாமா? என்றாலும் ஒரு மலையகப் பெண்மணிக்கு ஆகி விட்டதே...?
இந்தக் கேவலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்களை, அமைப்புகளை என பேனை குற்றம் சாட்ட இயலும் வேண்டாம் இங்கே பட்டியல்.
இன்னொரு புறத்தில் பார்த்தால் குடும்பத்தாரே ஒன்றிணைந்து, 42ல் ஒன்றையாவது கொண்டுவந்திருக்கலாம்.
அதிலும் கூட, அதிமுக்கியமாகக் கதாசிரியையின் அருமை மகளார், ஆய்வாளர், விரிவுரையாளர், தன் “அன்னையாரின் நினைவில்” ஒரு நூலை வெளிக்கொணர அவரது பொருளாதாரம் இடமளித்திருக்காதா?
மகளார், திருமதி லறீனா ஹக் ஃபிர்தவ’ஸ்’ 2003லிருந்து 2015 வரை பல்துறை சார்ந்த தன் சொந்தப் படைப்புகள் பத்து நூலுருவில் கொண்டு வந்துள்ளார். 2015க்குப் பிறகும் இன்றையப் பொழுது வரையிலுங்கூட மேலும் நூல்களைப் பதிப்பித்திருக்கலாம்.
அதில் ஒன்றை - ஒன்றையே ஒன்றை தவிர்த்து, அருமை உம்மாவின் சிருஷ்டியை வெளியிட்டு நன்றிக் கடன் செலுத்தி இருக்கலாமே? அது வரலாறாகியிருக்குமே?
ஹூம்! அம்புட்டுத்தேன். “மாத்தளை ஃபர்வீன்” கொடுத்து வைக்காத தூப்பாக்கியவதி!
அடிக்குறிப்பு: இந்தக் கசப்புடன் பிரசுரமாகியுள்ள "மாத்தளை ஃபர்வீன்" நிழற்படத்தை ஆய்வெழுத்தாளர் திருமதி நூறுல் அயின் நஜ்முல் ஹுசைன் வழங்கி உதவினார். அத்துடன், அவரது "மின்னும் தாரகைகள்"நூலிலிருந்து சில தகவல்கள் பெறப்பட்டன.
கசப்பு-2
இஞ்சி மகத்துவம் பற்றி ‘இஞ்சி பிளேன் டீ’ குடியர்களுக்குத் தெரியாததல்ல.
அதே போல் ‘இஞ்சி பிஸ்கட்’ பற்றி யார் யாரெல்லாம் அறிந்திருந்தீர்களோ...
ஆஹா! அந்த இனிப்புச் சுவையுடன் கூடிய பிஸ்கட்டை மென்று கொண்டே தான் பேனா விறு விறுப்பாக வேலை செய்கிறது.
இன்றையப் பொழுதில் இலங்கையில் இரு பிரபல நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு தயாரிக்கின்றன. இரண்டுமே நல்லதாம். மாற்றி மாற்றி சுவைத்து ருசிப்பது என் வழமை.
இப்படி, ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை வாங்கி மேசையில் வைத்தபடி (இன்னும் திறக்காமல்) அதன் மேல்அட்டை என்கிற வண்ண wrap paper மேல் கண்கள் மேய்ந்து நிலைகுத்தின.
அங்கே ‘இஞ்சி பிஸ்கட்’டைக் காணோம்! ‘இன்கு பிஸ்கட்’ தான் மூன்று மொழிகளிலும் கண்ணைச் சிமிட்டிப் பார்த்தன!
அவை சகிக்க இயலாத பார்வை. ‘தமிழங்கிலத்தில் சொல்ல அனுமதியுங்கள் ‘அன் சகிக்க பல்’!
‘இஞ்சி’ என்ற நல்ல தமிழ்ப் பதத்தை அப்படியே விழுங்கி ஏப்பம் விட்டு விட்டு, ‘இன்குரு’ எனத் தமிழ்க் கொலை செய்தே போடப்பட்டிருக்கிறது. ‘GINGER’ என்ற ஆங்கிலம், இருட்டடிப்புக்குள்ளாகி அங்கேயும் ‘இங்குறு’ என்ற சிங்களம் புகுத்தப்பட்டிருப்பது போல் அழகுத் தமிழ் இஞ்சியை இருட்டிற்குள் அனுப்பி, தமிழில் சிங்களவார்த்தையை போட்டிருப்பது தான் இஞ்சியைப் போல் காரமாக இருக்கிறது தமிழ் மணிகளுக்கு.
அபிமானிகளிடமே நீதி நியாயம் கேட்டு கசப்புவில்லையைத் தருகின்றேன்.
இனிப்பு
இந்த அக்டோபர் மாதம் முடிவதற்கு இன்னும் ஏழே நாட்கள். “வாசிப்புக்கான மாதம்” என்று சொல்லிக் கொண்டார்கள். என் போன்றவர்களுக்கு நாள் முழுதும் வாசிப்பு என்பதால் வழக்கம் போல் நேரம் பறந்து கொண்டிருக்கிறது. ஒரு பத்து நாட்களுக்கு முன்னால், கேரள மலையாளக் கரையோரத்திலிருந்து ஒரு செய்தி கிடைத்தது. ஒரு கிராமத்திற்கு “புத்தகக் கிராமம்” என்று பெயர் சூட்டி விட்டார்களாம்!
அட! தம்பிரானே! சரணம் அய்யப்பா!
கேரளமாநிலத்தில் ‘கொல்லம்” ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் அந்த மாவட்டத்தில் ‘பெருங்குளம்’ என்று ஒரு சிறிய கிராமம் அங்கேயே இந்தச் சேதி!
அங்குள்ள வாசிப்புப்பிரியர்கள், தங்கள் கிராமத்து வீதிகளில் ஆங்காங்கே ‘புறாக் கூடுகள்’ போன்று மரத்தால் செய்த அலுமாரிகளை அமைத்து நல்ல நல்ல நூல்களை அடுக்கி வைத்துள்ளனர்.
வாசிப்பை நேசிப்போர் தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொள்கின்றனர். படித்து முடித்ததும் எடுத்த இடத்தில் புத்தகம் கட்டாயமாக, நிச்சயமாக வைக்கப்படும்.
அதன் பின் இன்னொன்று வாசிப்புக்கு எடுக்கப்படும் எல்லாமே இலவசம்! இலவசம்! காசு கீசு பேசப்படாது!அமெரிக்காவில் உள்ள ஒரு நகரத்தில் சிறிய இலவச நூலகம் நடத்துவதை கேள்விப்பட்டு அதை போலவே இங்கு இந்தத் திட்டத்தை கிராம மக்கள் கொண்டு வந்துள்ளனர். கிராமம் முழுவதும் 11 இடங்களில் புத்தக அலுமாரி வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. இதில் 600 பேர்உு்பி்கா்ள்இ்றைய கேரள முதல்வர், பினராயி விஜயன், “புத்தகக் கிராமம்” என அதிகாரபூர்வமாக அறிவித்துப் பெயர் சூட்டி உள்ளார். என்ன, இலங்கை வாசக அபிமானிகளே, சேதி கேட்டோ...?