![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/10/31/a21.jpg?itok=5iwIcN2y)
2022 இல் நடைபெறவுள்ள 23 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ண தொடருக்கான தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை பூர்வாங்க குழாம் இலங்கை கால்பந்து சம்மேளத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூர்வாங்க அணியில் இணைக்கப்பட்டுள்ள 23 பேரில் வடமாகாணத்தில் உருத்திரபுரம் கழகத்தில் இருந்து, அதுவும் கிராமப்புற கழகமொன்றில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்கள் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த கண்ணன் தேனுசன் மற்றும் யுவராசா தனுசன் மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.
தெரிவு செய்யப்பட்டுள்ள 23 பேரில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக வீரர்கள் இருவரைத்தவிர மற்றைய அனைவரும் தொழில்முறை கழக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உருத்திரபுரம் விளையாட்டு கழகத்தை சேர்ந்த யுவராசா தனுசன் இந்த அணியில் விளையாடியமை கவனிக்கத்தக்கது.