Upcycling செயற்திட்டத்தின் வெற்றியாளர்கள் அறிவிப்பு | தினகரன் வாரமஞ்சரி

Upcycling செயற்திட்டத்தின் வெற்றியாளர்கள் அறிவிப்பு

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, செலான் டிக்கிரி – வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) இணைந்து ஏற்பாடு செய்திருந்த “மேம்படுத்தப்பட்ட மீள் பயன்பாட்டுக்கான (upcycled) கழிவுப் பொருட்கள் போட்டி” முதல் சுற்று வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. மெய்நிகர் போட்டியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சிறுவர்களுக்கு தமது ஆக்கத்திறனையும் புத்தாக்கமான சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிப்பதாக அமைந்திருந்தது.

WNPS உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜிட்டல் போட்டியினூடாக, சிறுவர்களுக்கு மீள் பயன்பாடு – மீள் சுழற்சி தொடர்பான முக்கியத்துவத்தை உணர்த்தியிருந்ததுடன், அவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருள் அசல் பொருளை விட மேம்படுத்தப்பட்ட உயர் பெறுமதி வாய்ந்ததாக உருவாக்கலாம் என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது. நாட்டின் முன்னணி சிறுவர் சேமிப்புக் கணக்கான செலான் டிக்கிரி, இந்தத் திட்டத்துக்காக முன்வந்து, சிறுவர்களுக்கு இயற்கை பாதுகாப்பு தொடர்பான முக்கியத்துவத்தை போதிக்கும் எதிர்பார்ப்புடன் செயலாற்றியிருந்தது.

இந்தப் போட்டிக்காக கிடைக்கப்பெற்ற 200க்கும் அதிகமான சமர்ப்பிப்புகளிலிருந்து, இரு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த ஆறு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். வெற்றியாளர்கள் தமது பிரத்தியேகமான மீளப் பயன்பாட்டுப் பொருட்களின் ஆக்கபூர்வமான வடிவமைப்பு, பயன்பாட்டு பொருட்கள் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் பாடசாலை பைகள், வலைப்பந்தாட்ட விளையாட்டு கருவிகள், விளையாட்டு பொதிகள், காகிதாதிகள் பொதிகள், டிக்கிரி டிஜி கைக்கடிகாரங்கள் மற்றும் புதிதாக செலான் டிக்கிரி கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அதில் பணப்பரிசுகள் வைப்புச் செய்யப்பட்டமை அடங்கலான விறுவிறுப்பான அன்பளிப்புகளைப் பெற்றுக் கொண்டனர்.

5 – 8 வயது வரையான பிரிவைச் சேர்ந்த வெற்றியாளர்களில், செனெதி திமன்சா (முதலாமிடம்), எவ்மி செனல்யா காரியப்பெரும (இரண்டாமிடம்) மற்றும் எம். உமர் அக்மல் (மூன்றாமிடம்) ஆகியோர் அடங்கியிருந்தனர். 9 – 12 வயது வரையான பிரிவைச் சேர்ந்த வெற்றியாளர்களில், ரஷெலி தெவ்மி (முதலாமிடம்), கிம்பர்லி விஜேசூரிய (இரண்டாமிடம்) மற்றும் எம்.ஐ.எம். பிலால் (மூன்றாமிடம்) ஆகியோர் அடங்கியிருந்தனர்.

Comments