சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சி நிறுவனம் உலகின் முன்னணி நுகர்வோர் இலத்திரனியல் வர்த்தக நாமங்களை விற்பனை செய்யும் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான வுஊடு நிறுனத்தினால் அதன் அதிநவீன கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டப் கருவிகளை உள்நாட்டு சந்தையில் வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ளது.
அதிநவீன அறிவார்ந்த தொழில்நுட்பம் மற்றும் சிறந்த கையடக்கத்தொலைபேசி அனுபவத்தை வழங்கும் நோக்கில் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பத்துடன் கூடிய TCL 20 Pro 5G, TCL 20Y MTK6762D, TCL 20SE SM4250, TCL 20L10 SM6115ஆகிய மாதிரி கையடக்கத் தொலைபேசிகளை தேசிய விநியோகஸ்தர் என்ற ரீதியில் சிங்கர் காட்சிப்படுத்தவுள்ளது. ஆர்வத்தைத் தூண்டக்கூடிய 10புதிய TCL கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 4டப் மாதிரிகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
TCL இன் மேம்பட்ட காட்சிப்படுத்தல் தொழில்நுட்பமான NXTVISION> இப் புதிய கையடக்கத் தொலைபேசிகளில் காணப்படும் சிறப்பம்சமாகும். இது கண்களுக்கு சிரமம் கொடுக்காது நீல ஒளியைக் குறைத்து கண்களுக்கான பாதுகாப்பை வழங்கும் அதேநேரம் பயன்படுத்துபவர்களுக்கு நிஜ வாழ்க்கை காட்சி அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கூர்மையான விபரங்கள் மற்றும் அதிக மாறுபாட்டை அதிகரிக்கும் வண்ணங்களின் துல்லியத் தன்மையுடனான தனிப்பட்ட அனுபவத்தையும் வழங்கும்.
இது தொடர்பில் விளக்கமளித்த சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் விஜேவர்தன 'உலகப் பிரபலமிக்க வர்த்தக நாமமான வுஊடு இன் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டப்களை எமது பலமான தயாரிப்புக்களின் தொகுதிகளில் இணைத்துக் கொள்வதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஸ்மார்ட் தொலைக்காட்சி வரிசையில் ஒரு தசாப்தத்துக்கு மேலாக வுஊடு தொலைக்காட்சிகளை மக்களுக்கு வழங்குவதில் சிங்கர் தனித்துவமான விநியோகஸ்தராக விளங்குகிறது.