DFCC வங்கியானது, கறுவா ஏற்றுமதி மற்றும் அவர்களின் வழங்கல் சங்கிலியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்து, நாட்டிற்கு வரும் அந்நியசெலாவணியை அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம், DFCC வங்கி கறுவா ஏற்றுமதியாளர்களின் தேவைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக சிலகாலம் அவர்களுடனான ஈடுபாட்டிற்குப்பிறகு பிரத்தியேகமயமாக்கப்பட்ட ஏற்றுமதி நிதியியல் தீர்வுகளை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சித்திட்டம் கறுவா உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிற்துறையில் பல முக்கிய பங்குதாரர்களை உள்வாங்கியுள்ளதைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளால் தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. DFCC வங்கி வழங்கியுள்ள தீர்வுகள் இதுவரை நன்கு பயன்படுத்தப்பட்டு, துறையின் வணிக அளவு மட்டங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு இடமளித்துள்ளது. வங்கியின் பிரத்தியேகமயமாக்கப்பட்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைக்கான நிதியியல் சேவை வழங்கல், சிறந்த உற்பத்தித்திறன் மற்றும் பலாபலனை உறுதி செய்வதற்காக, ஏற்றுமதி வாடிக்கையாளர்களின் வழங்கல் சங்கிலியை இலக்காகக் கொண்டு கறுவா தொழிற்துறையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த DFCC வங்கியின் கடல்கடந்த வங்கிச்சேவை, வாணிபம் மற்றும் சர்வதேச வர்த்தக அபிவிருத்திக்கான துணைத்தலைமை அதிகாரி அன்டன் ஆறுமுகம், 'DFCC வங்கியானது, முக்கிய கறுவா ஏற்றுமதியாளர்களுக்கு அதன் விரிவான ஏற்றுமதி நிதித்தீர்வுகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறது. அந்நியச் செலாவணி வரவை முன்னெடுப்பதன் மூலம் தேசிய பொருளாதாரத்தின் மீளெழுச்சி மற்றும் வளர்ச்சியைப் பேணிப்பாதுகாக்க இடமளிக்கின்றது. இந்த அங்கீகாரத் திட்டம் நம்முடன் தொடர்புபட்ட தரப்பினரின் வளர்ச்சி மற்றும் சுபீட்சத்திற்கு பங்களிக்கும் DFCC வங்கியின் நீண்டகாலப் பயணத்தின் ஒரு பகுதியாகும் என்றார்.