![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/23/a23_0.jpg?itok=5zMD5o5z)
திகன, Victoria Golf and Country Resort பகுதியை அண்மித்து 16விடுமுறை இல்லங்களை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக ஜோன்கீல்ஸ் புரொப்பர்டீஸ் அறிவித்துள்ளது. ‘Sunrise Ridge’ என பெயரிடப்பட்டுள்ள இத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
அடிக்கல் நாட்டுவதற்கு முன்னதாக மொத்த மனைகளின் 60சதவீதமானவை விற்பனையாகியிருந்தமை விசேட அம்சமாகும். கொல்ஃவ் திடலை முகப்பாகக் கொண்டும், விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் கண்டி மலைக்குன்றுகள் போன்றவற்றை காட்சிகளாக கொண்டும் அமைக்கப்படும் ‘Sunrise Ridge’, புகழ்பெற்ற கட்டடக் கலைஞரான மதுர பிரேமதிலகவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பிரத்தியேகமான இந்த பதினாறு மனைகள் 2படுக்கையறைகளைக் கொண்டதாக அமைந்திருக்கும் என்பதுடன் சுமார் 2000சதுர அடியில் அமையப்பெறும். ஆரம்ப விலை ரூ. 55.5மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மனைகளின் உரிமையாளர்களுக்கு 6வருடங்களுக்கு தமது சொத்துகளை நிர்வகிப்பதற்கான சலுகை வழங்கப்படும்.
ஜோன்கீல்ஸ் புரொப்பர்டீஸ் பிரிவு தலைமை அதிகாரியும், நிறைவேற்று உபதலைவருமான நயன மாவில்மட கருத்துத் தெரிவிக்கையில், 'பலர் தமது இரண்டாவது மனைகளை சிறந்த அமைவிடங்களில் கொண்டுள்ள போதிலும், அவற்றை பேணிப் பராமரிப்பது இலகுவான காரியமல்ல. வாடிக்கையாளர்களிடமிருந்து அந்த சுமையை இல்லாமல் செய்யும் தீர்வொன்றை வடிவமைக்க நாம் தீர்மானித்தோம். எனவே அவர்களுக்கு தமது சொந்த இருப்பிடத்திலிருந்தவாறு இனிய விடுமுறை அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். பிரத்தியேகமான சமூக கட்டமைப்பினுள் அமைந்த அழகிய இல்லங்களினூடாக, சிறந்த காட்சி அமைப்புகள், சிக்கலில்லாத பயண வசதிகள் போன்றவற்றுடன் அமைந்திருப்பதுடன், சுற்றுலா அபிவிருத்தியுடன் இலாமீட்டக்கூடிய வாய்ப்புகளும் வழங்கப்படும். இவற்றுடன் உலகத்தரம் வாய்ந்த கொல்ஃவ் திடலும் அருகாமையில் அமைந்துள்ளது என்றார்.