![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/30/a34.jpg?itok=BTbwbA5B)
நமது நாட்டில் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கின்ற அவை தோற்றுவிக்கும் ஆபத்துக்களை தடுப்பதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். அப்பாதிப்புக்கள் தொடர்கதையாகி நமது நாட்டை நாசப்படுத்தி விடும் என என் உள்மனம் எனக்கு எச்சரிக்கைவிடுத்தது என்கிறார் எரிவாயு அடுப்பு வெடிப்பதை நிறுத்தும் சாதனத்தை கண்டுபிடித்த கல்முனை கார்மல் பாத்திமாகல்லூரி தேசியப் பாடசாலை மாணவன் பத்மனாதன் லதேஸ்
நமது நாட்டில் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கின்றன இதனால் உயிர்ச்சேதமும் உடமைச் சேதமும் ஏற்படுகின்றன. இவை சிற்சில சந்தர்ப்பஙகளில் பகுதிச் சேதமாகவோ அல்லது முழுச் சேதமாகவோ ஏற்பட்டு விடுகின்றன. சேதங்களையும் நட்டங்களையும்விட. இவை உண்டாக்கும் மன வேதனை எண்ணிலடங்காதது என்பது உண்மை.
நான் புகழ் பூத்த கல்முனை கார்மல் பாத்திமா கல்லூரியின் மாணவன் இப்போது கல்விப் பொதுத் தராதர வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறேன்.
விஞ்ஞானம் எவ்வனவோ முன்னேறிய போதிலும் எரிவாயு அடுப்புக்கள் தோற்றுவிக்கும் பாதிப்புக்களும் அதனால் ஏற்படும் அவலங்களும் எனது மனதை உலுக்கின. ஆபத்துக்களை தடுப்பதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். அப்படியில்லா விட்டால் அப்பாதிப்புக்கள் தொடர்கதையாகி நமது நாட்டை நாசப்படுத்திவிடும் என் என் உள்மனம் எனக்கு எச்சரிக்கை விடுத்தது அடுப்பை எரிப்பதற்கு இரண்டு வாயுக்கள் சேர்ந்த கலவையே பாவிக்கப்படுகிறது. எனது நோக்கம் சிலிண்டரிலிருந்து வாயு வேகமாக வெளிக்கிளம்பும் வேளையில் அதனை உணர்ந்து அதை நிறுத்துவதற்கு கருவியை கண்டுபிடிப்பதாகும்.
அதுவே “அதற்கு ”உணர் கருவி” என்று பெயிரிட்டேன். எனது கண்டுபிடிப்பில் பிரதான பாகமே அதுதான். இதனை கண்டுபிடிப்பதற்கும் பொருத்திப் பார்த்து தவறுகனை திருத்தித்திருத்தி அமைப்பதற்கும் ஓரிரு வாரங்கள் தேவைப்பட்டன. எந்தவொரு கண்டுபிடிப்பையும் வெளிக் கொணரும்போது. அதில் தவறுகள் ஏற்பட்டு விடக் கூடாதல்லவா? தவறுகள் ஏற்படும்போது அதன் விளைவு உயிராபத்தை ஏற்படுத்திவிடக்கூடும் என்ற எண்ணமே. எனது ஆய்வை கச்சிதமாக செய்வதற்கு காரணமாயிருந்தது.நான் கண்டு பிடித்ததை நான் என் அம்மாவிடம் காட்டினேன்” அம்மா என்னை கட்டி அணைத்து முத்தமிட்டார்” பின்பு எனது பாடசாலை அதிபர். வண.சகோ. சந்தியாகுவுக்கும் செய்முறையினூடாக காட்டினேன் எனது பாடசாலை அதிபரும் ஆசிரியார்களும் ஒட்டு மொத்தமாக பாடசாலைச் சமூகமும் என்னைப் பாராட்டின. எனது பாடசாலை மாணவர்கள் இருவர் இரண்டு கண்டு பிடிப்பக்களை செய்து பாடசாலைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்த வரிசையில் நான மூன்றாமிடத்தில் நிற்கிறேன்.
எனது பாடசாலை 120வருடங்கள் பழமை வாய்ந்தது. அதற்கு எமது கண்டுபிடிப்பக்களும் செழுமை சேர்ப்பதாக இருக்கிறது.
இப்போது இதற்குரிய ஆக்க உரிமைப்பத்திரத்தை பெறுவதற்காக விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சுக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.
அது இலகவில் கிடைப்பதில் பல்வேறு ஆய்வுகளை அங்குள்ள ஆராய்ச்சியாளர்களிடம் நான் செய்து காட்டி அதற்கான விளக்கங்களையும் விபரங்களையும் கொடுத்து அவர்கள் திருப்தியடையும் பட்சத்திலே அது கிடைக்கும்.
அதன் பின்பு எனது பெயரும் எனது பாடசாலையின் பெயரும் இலங்கையிலுள்ள கண்டு பிடிப்பாளர்கள் பட்டியலில் இடம்பெறும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.
பேட்டி கண்டவர்: எஸ்.எஸ்.தவபாலன்