பஞ்சாங்க வழக்கில் குற்றமற்றவராக பசில் | தினகரன் வாரமஞ்சரி

பஞ்சாங்க வழக்கில் குற்றமற்றவராக பசில்

 

சட்ட மா அதிபர் திணைக்களம் பொலிஸ் திணைக்களம் எடுக்கவேண்டிய முடிவுகளை அரசியல்வாதிகள் எடுக்க முனைந்தால் அங்கு சட்டம் காடுமண்டிப் போகும்.ஆனால் ‘நல்லாட்சி’ காலத்தில் சட்டமா அதிபரின் கருத்தைக் கூட பின்தள்ளி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை அனைவரும் அறிவார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் பிரதமர் அமைத்தார் என கூறப்படும் ‘அரசியலமைப்பு சபை’ மற்றும் அதனோடு இணைந்த ஊழலுக்கு எதிரான குழு தொடர்பாக சமூகத்தில் விமர்சனங்கள் காணப்பட்டன. அந்த குழு ராஜபக்‌ஷக்களை சிறையில் அடைக்க உருவாக்கப்பட்டது என சிலர் கூறினார்கள்.

அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ மற்றும் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுதலையான ’பஞ்சாங்க வழக்கு’ அவ்வாறான ஒன்றென வழக்கு தீர்ப்பிலிருந்து தெளிவாகியுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்தவால் தற்போதைய நிதி அமைச்சர் அன்றைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ மற்றும் திவிநெகும திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ரணவக்க ஆராய்ச்சிகே அமித் கித்சிறி ஆகியோருக்கு எதிரான பஞ்சாங்க வழக்கிலிருந்து அவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அவ்வாறு குற்றமற்றவர்கள் என பூரணமான வழக்கு விசாரணையின் பின்னரே விடுதலை செய்யப்பட்டது விசேட அம்சமாகும். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சாட்சியம் அளிக்க அழைக்கப்படாமலே வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டதிலிருந்து வழக்கில் எதுவித சாரமும் இல்லை என்பது தெளிவாகிறது. உயர்நீதிமன்ற நீதிபதியும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

 எவ்வாறாயினும் இந்த குறிப்பிட்ட கடந்தகால சம்பவம் தொடர்பாக அப்போதைய ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பேசியாகவேண்டும். வழக்கை பார்க்கும்போது இந்த வழக்கானது பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிரான அரசியல் விரோதத்தால் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு என்பதை அன்றைய சட்ட வல்லுநர்கள் தெரிவித்திருந்தார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக சாட்சியங்களை பதிவு செய்வதற்காக 2016ஆம் ஆண்டளவில் விசாரணை நிறுவனத்துக்கு வருமாறு பசில் ராஜபக்‌ஷவுக்கு அறிவித்த பின்னர் அவர் அதனை மதித்து வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விசாரணை அதிகாரிகள் பாரிய ஊடக பிரசாரம் ஒன்றை மேற்கொண்டு அவரை குறிப்பிட்ட விசாரணை காரியாலயத்துக்கு அழைத்து வந்தார்கள். பின்னர் மாலை ஆறு, ஏழு மணியளவில் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி அமைச்சர் பசில் மற்றும் கித்சிறி ரணவக்க ஆகியோரை நடுராத்திரியில் விளக்கமறியலில் வைத்தார்கள். அதிலிருந்தே இந்த வழக்கு தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் அக்கறை தெளிவாகியுள்ளது. அதை மேலும் எடுத்துக்காட்டுவதாக இவர்கள் இருவரையும் நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு முன்னரே அந்த நீதிமன்றத்துக்கு அருகில் சிறைச்சாலை வாகனம் ஒன்றும் காணப்பட்டுள்ளது.

பொலிஸாரால் சட்டமா அதிபருக்கு முன்வைக்கப்பட்ட விசாரணை ஆவணங்களின்படி சட்டமா அதிபரால் முதலில் பசில் ராஜபக்‌ஷ மற்றும் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக பஞ்சாங்கம் அச்சிட்டமை தொடர்பான குற்றச்சாட்டு வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் திவிநெகும பஞ்சாங்கம் 5லட்சம் அச்சடித்ததாகவும் அதற்கு 250லட்சம் ரூபா செலவிட்டதாகவுமே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வழக்கு 2016டிசம்பர் 6ஆம் திகதி முறைப்பாட்டு தரப்பால் விலக்கிக் கொள்ளப்பட்டதோடு அன்றைய தினம் வேறொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் முதலில் 5லட்சம் பஞ்சாங்கங்கள் அச்சிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு 50லட்சம் பஞ்சாங்கங்கள் அச்சிடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டது. பசில் ராஜபக்‌ஷவும் மற்றும் கித்சிறி ரணவக்கவும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டது இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்ட பஞ்சாங்க வழக்கிலிருந்தாகும்.

2016டிசம்பர் மாதம் 6ஆம் திகதி சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்படி பசில் ராஜபக்‌ஷவுக்கு மற்றும் கித்சிறி ரணவக்கவுக்கும் எதிராக ஐந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

2014நவம்பரிலிருந்து டிசம்பர் 31ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷவின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி 50லட்சம் பஞ்சாங்கங்களை அச்சிட்டு 1981இலக்கம் 15என்னும் ஜனாதிபதி தேர்தல் சட்டம் 79என்னும் பிரிவினை மீறி ஊழல் தொடர்பாக குற்றமிழைத்தமை, அந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்தமை, தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனை பெறக்கூடிய குற்றத்தை மேற்கொண்டமை, மற்றும் ஜனாதிபதியை தெரிவுசெய்யும் சட்டத்துக்கு அமைய தண்டனை பெறக்கூடிய குற்றங்களை புரிந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான 294லட்ச ரூபா நிதியை தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்தமை போன்றவையே அந்த ஐந்து குற்றச்சாட்டுகளும் என குறிப்பிடலாம். இந்த வழக்கு உள்ளிட்ட மேலும் இரண்டு வழக்குகள் காரணமாக பசில் ராஜபக்‌ஷ 70நாட்களும், கித்சிறி ரணவக்க 152நாட்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த குற்றப்பத்திரம் 2017பெப்ரவரி 15ஆம் திகதி கித்சிறி ரணவக்கவிற்கு திறந்த நீதிமன்றில் கையளிக்கப்பட்டதோடு ராஜபக்‌ஷவுக்கு மார்ச் 15ஆம் திகதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. 2020நம்பர் 5ஆம் திகதி ஆரம்ப நிலை நீதிபதி கிஹான் குலத்துங்க முன்னிலையில் இந்த குற்றப் பத்திரம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

அங்கு குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகிய சட்டத்தரணிகள் அடிப்படை மறுப்பை நீதிமன்றத்தில் முன்வைத்து வழக்கின் குற்றங்கள் எந்த ஒரு அடிப்படையும் இல்லாதது என பழைய வழக்கின் முடிவை முன்வைத்து கூறினார்கள். அத்துடன் இந்த வழக்கை இந் நிலைமையின் கீழ் முன்னெடுத்து செல்வதற்கு முடியாது எனவும் சுட்டிக் காட்டினார்கள்.

 இவ் வழக்கு சட்ட அடிப்படையற்றது எனவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பசில் ராஜபக்‌ஷவின் அரசியல் பயணத்தை நிறுத்துவதற்கும் பசில் ராஜபக்‌ஷவை அரசியல் பூமியிலிருந்து நீக்குவதற்கும் தொடுக்கப்பட்ட வழக்கு என சட்டத்தரணி சனத் விஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில் பசில் ராஜபக்‌ஷவுக்கு ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன 2017நவம்பர் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து கூறினார்.

ஜனாதிபதியை தெரிவுசெய்யும் சட்டம் 113அ பிரிவின் கீழ் முன் வைக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டு 113ஆ பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டு பசில் ராஜபக்‌ஷவின் குடியுரிமையையும் நீக்குவதற்கு சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அந்த சூழ்ச்சி பண்டாரநாயக்க அம்மையாருக்கு குடியுரிமையை நீக்கிய சூழ்ச்சிக்கு சமனானது என விடயங்களை முன்வைத்தார். சட்டத்தில் ‘அ’ குறிப்பிடப்படவேண்டியது ‘ஆ’என குறிப்பிடப்பட்டிருந்தது அச்சுப்பிழை அல்லது தட்டச்சு பிழையாலோ அல்லவென்றும் சூழ்ச்சி காரணமாகவே என அவர் தெளிவுபடுத்தியது வழக்கை தொடுத்த பின்னணி மற்றும் வழக்கின் விசாரணை நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியாகும். பல வழக்கு தவணைகளுக்கு பின்னர் உயர்நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் 5ஆம் திகதி வழக்கு விசாரணையை ஆரம்பித்த பின்னர் இந்த முறைப்பாட்டின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த சட்டமா அதிபரால் நீதிமன்றத்தின் முன்னால் சாட்சிகள் அழைக்கப்பட்டார்கள்.

திவிநெகும பஞ்சாங்க வழக்கு குற்றச்சாட்டுக்கு சமனான குற்றச்சாட்டுடன் கூடிய பல வழக்குகளிலிருந்து ( வழக்கு விசாரணையின் பின்னர் ஜி ஐ குழாய் வழக்கிலிருந்து விடுவிக்க உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதாக) குற்றம்சாட்டப்பட்டவர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு சமனான குற்றச்சாட்டை கொண்ட இந்த பஞ்சாங்க வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபரிடமும் மற்றும் உயர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார்கள்.

சட்டமா அதிபரின் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட பதில் சொலிசிஸ்டர் நாயகம் திலீப பீரிஸ் அந்த வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமா அதிபர் வழக்கின் சாட்சிகளை விசாரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி சட்டமா அதிபர் சமுர்த்தி இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் சம்பிக்க தினேஷ் கலு ஆராய்ச்சியின் சாட்சியத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

(அந்த சாட்சி முன்னர் எப் சிஐடி க்கு சாட்சி வழங்கியவர்)

அந்த சாட்சிகளின் படி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்பாக குற்றவியல் தவறு கண்டறியப்படாததால் மற்றும் பஞ்சாங்கம் அச்சிடப்பட்டது அரச கொள்கைகளுக்கு அமைய குறிப்பிட்ட நிதி வழங்கல் நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சட்டரீதியான நடவடிக்கை என கண்டறிந்ததால் வழக்கை வாபஸ் பெற வேண்டுமென ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நீதிமன்றில் தெரிவித்தார்.

வழக்கின் சாட்சிகளுக்கு அமைய தொடர்ந்தும் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால் வழக்கு தொடர்பாக முடிவொன்றை எடுக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவர்களின் சட்டத்தரணி சட்டமா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், இந்த வழக்குக்கு இணைந்ததாக தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதால் அந்த வேண்டுகோளை விடுத்ததாக காமினி மாரப்பன நீதிமன்றில் தெரிவித்தார்..

குற்றம் சாட்டப்பட்டவர்களின் குறிப்பிட்ட வேண்டுகோள் தொடர்பாக பதில் சொலிசிட்டர் நாயகம் திலீப் பிரீஸ் நீதிமன்றில் பின்வருமாறு விடயங்களை முன்வைத்தார்.

‘இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆரம்பமானது 2015பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஊழல் ஒழிப்பு குழுவின் செயலாளர் பணிப்பாளர் என கூறப்படும் நபர் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு (FCID) செய்த முறைப்பாட்டுக்கு அமையவாகும். பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த விசாரணை கோவை மற்றும் ஆவணங்களின் படி சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அவ்வாறு தொடுக்கப்பட்ட வழக்குகளில் எஞ்சியிருப்பது இது மாத்திரமே.

வழக்கின் சம்பவம் மற்றும் தன்மையின் படி குற்றவியல் தவறு நடந்துள்ளதா இல்லையா என முடிவு செய்வதற்கு மேலும் சாட்சியங்களை அழைக்க வேண்டும். ஏனென்றால் சட்டமா அதிபரால் சாட்சிகளுடன் நேரடி கலந்துரையாடலை நடத்த முடியாது. விசாரணைகளின் படி வழக்கொன்றை தாக்கல் செய்வது போன்று வாபஸ் பெறுவதும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் வழக்கை வாபஸ் பெறுவதால் வேறுவிதமான விளக்கங்கள் சமூகத்திற்கு சென்றடையும்.

சட்டமா அதிபருக்கு ஒரு முடிவை எடுப்பதற்கான ஒரே வழி ஆவணங்களும் மற்றும் சாட்சிகளும் மாத்திரமே. சட்டமா அதிபரால் சாட்சியங்களை அழைத்து கலந்துரையாட முடியாது. இன்று முன்வைக்கப்பட்ட சாட்சியங்கங்களின்படி தெரியவருவதாவது இது 2013இலக்கம் 1என்னும் திவிநெகும சட்டத்தின்படி அமைச்சின் நடவடிக்கைகளுக்கு அமையவே பஞ்சாங்கம் அச்சிடப்பட்டுள்ளது. இந் நடவடிக்கையானது 2014க்கு முன்னர் நடைபெற்றுள்ளதாக இந்த சாட்சியங்களின் படி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சாட்சியங்கள் அளிக்கப்பட வேண்டுமா அவ்வாறு இல்லாவிட்டால் சட்டமா அதிபர் எடுக்கும் முடிவு என்ன என்பது தொடர்பாக நீதிமன்றத்திற்கு எதிர்காலத்தில் அறியத்தரப்படும்’ அடுத்த வழக்கு தவணையின் போது சட்டமா அதிபர் சார்பில் ஒரு சாட்சி அல்ல மேலும் இரண்டு சாட்சியங்களை அழைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சட்டமா அதிபரின் அந்த முடிவை நிராகரித்த உயர் நீதிமன்றம் ஒன்றிரண்டு சாட்சிகளை மாத்திரமல்ல அனைத்து சாட்சிகளையும் நீதிமன்றத்திற்கு அழைக்கும்படி சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

அந்த சாட்சிகளை அழைப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களின் சட்டத்தரணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் குறிப்பிட்டார்.

அதன்படி பசில் ராஜபக்‌ஷ மற்றும் கித்சிறி ரணவக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்காக முறைப்பாட்டாளர் சார்பில் அரச சாட்சியாளர்கள் 5பேர் கொழும்பு உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் சாட்சியங்களை வழங்கினார்கள்.

2015க்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் விவசாய பஞ்சாங்கங்களை அச்சிடுவதற்கு முன்னால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்களினது மாத்திரமல்ல முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் படங்களையும் உள்ளடக்கி விவசாய பஞ்சாங்கங்களை அச்சிட்டுள்ளதாக சாட்சியாளர்கள் அந்த பஞ்சாங்கங்களை நீதிமன்றில் முன்வைத்து சாட்சியங்களை வழங்கினார்கள். சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அமைய அரச அதிகாரிகளான தாங்கள் பஞ்சாங்கங்களை அச்சிட்ட தாகவும், அவ்வாறு பணத்தை செலவு செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்க அச்சடிக்கப்பட்ட பஞ்சாங்கங்கள் 2015ஜனவரி 8ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிப்பதை தடுத்ததன் காரணமாக நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சாட்சிகள் தெரிவித்தார்கள்.

அதுமாத்திரமல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் அதில் இணைத்து கொள்ளப்பட்டதற்கான காரணம் 2015ம் ஆண்டு தெங்கு அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை ஆகும். திவிநெகும தேசிய விழாவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தென்னங்கன்றை நடும் படத்தை அதில் போடுவதற்கு உத்தியோகபூர்வமாக முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

 திவிநெகும பஞ்சாங்கம் அச்சிடுவதற்கு தேவையான நிதியை திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான நிறுவனத்துக்காக 2013ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிதியிலிருந்து பெற்றுக் கொண்டதாகவும், பஞ்சாங்கம் அச்சிடுதல் அச்சிடும் நடவடிக்கை என்பதால் தொடர் செலவை அதற்காக பயன்படுத்தியதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர்( திட்ட) மகேஷ் பெரேரா சாட்சியமளிக்கையில் தெரிவித்தார். ‘’ நான் ஆரம்பத்தில் தெற்கு அபிவிருத்தி அதிகார சபையில் கடமையாற்றினேன். 2014ஜனவரி 8ஆம் திகதி தெற்கு அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட 5நிறுவனங்கள் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைக்கப்பட்டன. தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட திவிநெகும அபிவிருத்தி திணைக்களம் அமைக்கும்போது இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்காக திறைச்சேரியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. 2013ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி திவிநெகும அபிவிருத்தி திணைக்கள நிறுவனங்களுக்காக செலவு செய்ய அனுமதி கிடைத்திருந்தது. அதன்படி திவிநெகும பஞ்சாங்கத்தை தொடர் செலவிற்கு பெறப்படும் நிதியால் அச்சிடலாம் என்பதை நான் அறிவேன். பஞ்சாங்கம் அச்சிடும் பணி குறிப்பிட்ட பிரிவுகளின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட்டது’’ என தெரிவித்தார் . சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யப்போவதில்லை என பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தார்கள்.

பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணி சனத் விஜயவர்த்தனவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் த சில்வா, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த் வீரசிங்க, ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பன, ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாந்து, உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகி இருந்தார்கள்.

 கடந்த ஜனவரி 19ஆம் திகதி இந்த சாட்சி விசாரணைகளை பூர்த்தி செய்யப்பட்டதோடு முறைப்பாட்டின் மூலம் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் உறுதிசெய்ய தவறியுள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார். முறைப்பாட்டின் சாட்சிகள் குற்றச்சாட்டுகளை உறுதி செய்யாமல் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவே அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி முறைப்பாட்டில் உள்ள குற்றச்சாட்டுகள் எவ்வித அர்த்தமுமற்றவை என தனது தீர்ப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக குறிப்பிட்ட வழக்கு விசாரணையின் முடிவு பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேற்குறிப்பிடப்பட்ட சாட்சியங்களுக்கு  அமைய செலவிடப்பட்ட நிநிதியானது சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்காக சட்டபூர்வமான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டது.  அனைத்து சட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி சரியான முறையில் செலவிடப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

 4வ து குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளவாறு தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்ட 2014.11.22திகதியில் ஆன PER/2015/43சுற்றுநிருபம் மீறப்பட்டுள்ளதாக எவ்விதமான சாட்சியங்களும் வழங்கப்படவில்லை.

குறிப்பிடப்பட்ட சாட்சிகளுக்கு அமைய நான்காவது குற்றச்சாட்டும் உறுதி செய்யப்படாத தோடு  அந்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஐந்தாவது குற்றச்சாட்டும் தோல்வி அடைந்துள்ளது. 1வது குற்றம்சாட்டப்பட்டவராக இந்த நீதிமன்றின் முன்னாலுள்ள அன்றைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அமைச்சராக இருந்த பசில்  ரோகன ராஜபக்ஷ மற்றும் 2வது குற்றம்சாட்டப்பட்டவர்  இந்த நீதிமன்றின்  முன்னால் உள்ள திவிநெகும திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  ரணவக்க ஆராய்ச்சிலாகே  அமித்த கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை போதுமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சிகள் மூலம் உறுதி செய்ய  முறைப்பாட்டாளர்கள் தவறியுள்ளதாக உறுதிசெய்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருவரையும் குற்றங்களில் இருந்து விடுவித்து விடுதலை செய்கின்றேன்.என  உயர் நீதிமன்ற நீதிபதி தமித் தொவவட்டத்தை இதற்காக கையொப்பம் இட்டுள்ளார்.

ரோஷான் துஷார
தமிழில் : வீ.ஆர்.வயலட்

Comments