![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/06/a25.jpg?itok=XAFhv9Lc)
TVS Motor Company மற்றும் BMW Motorrad ஆகிய இரு நிறுவனங்களும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட எதிர்கால இலத்திரனியல் தொழில்நுட்பங்களின் கூட்டு அபிவிருத்தியுடன் தங்கள் நீண்டகால கூட்டாண்மையை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளன. இந்த முடிவின் அடிப்படையில், எதிர்கால BMW Motorrad தயாரிப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு, உலகளாவிய தரம், விநியோகச் சங்கிலி முகாமைத்துவம், கைத்தொழில்மயமாக்கல் ஆகியவற்றில் TVS மோட்டார் நிறுவனத்தின் நோக்கு அமைந்திருக்கும். இந்த மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பின் கீழ், இரு நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க வர்த்தக ரீதியான பலன்களை வழங்குவதற்காக பல்வேறு தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டுள்ளன.
BMW Motorrad மற்றும் TVS மோட்டார் நிறுவனம் பல்வேறு சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர் பிரிவுகளின் உலகளாவிய தேவைகளை மனதில் கொண்டு, எதிர்கால போக்குவரத்திற்கான தேவையை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பூர்த்தி செய்வதற்காக இரு தரப்பும் கவனம் செலுத்துவதன் மூலம் பொதுவான தளங்களை உருவாக்கவுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களினதும் பிரத்தியேக உற்பத்திகள் இந்த பொதுவான தளங்களில் உருவாக்கப்படவுள்ளதுடன், நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உலகளாவிய ரீதியில் சில்லறை ரீதியாக விற்பனையை மேற்கொள்ளும். TVS மோட்டார் நிறுவனமானது, வடிவமைப்பு, உற்பத்தி, விநியோகச் சங்கிலித் திறன்களில் பொறியியல் வல்லமையைத் தொடர்ந்து கொண்டு வருவதோடு, சிறந்த தரம் மற்றும் பொருளாதார நன்மைகளையும் வழங்கும். இந்த ஒத்துழைப்பின் மூலமான, முதலாவது தயாரிப்பு எதிர்வரும் 24மாதங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
TVS மோட்டார் நிறுவனமானது, ஒரு புகழ்பெற்ற இரு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளர் என்பதுடன், 8.5பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி கொண்ட TVS குழுமத்தின் முதன்மையான நிறுவனமுமாகும். TVS உலகளாவிய ரீதியில் 70நாடுகளில் முன்னிலையில் உள்ளது. அத்துடன், BMW குழுமமானது, அதன் நான்கு தரக்குறியீடுகளான BMW, MINI, Rolls-Royce, BMW Motorrad ஆகியவற்றின் மூலம் மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் துறையில் உலகின் முன்னணி ப்ரீமியம் உற்பத்தியாளராக திகழ்கின்றது. குழுமத்தின் உற்பத்தி வலையமைப்பானது 15நாடுகளில், 31உற்பத்தி மற்றும் பாகங்களை பொருத்தும் வசதிகளைக் கொண்டுள்ளது. இக்கூட்டாண்மை ஆனது, இரு தரப்பிற்கும் வெற்றி மிக்க ஒன்றாகும்.
கடந்த ஏப்ரல் 2013 இல், TVS மோட்டார் நிறுவனம் மற்றும் BMW Motorrad ஆகியன இணைந்து, உலகிற்கு sub-500cc மோட்டார்சைக்கிள்களை தயாரிப்பதற்கான நீண்ட கால மூலோபாய கூட்டாண்மையில் கையெழுத்திட்டன.