அஸ்ட்ரா 1965ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இலங்கையின் சிறுவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வளரத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் சிறந்த சுவையையும் வழங்கியது. அஸ்ட்ரா தற்போது Upfield க்கு சொந்தமான நிறுவனமாகும். உலகின் மிகப்பெரிய தாவர – அடிப்படையிலான உற்பத்தியை மேற்கொள்ளும் இந்நிறுவனம், 95க்கும் அதிகமான நாடுகளில் இயங்கி வருகிறது. இலங்கையின் குடும்பங்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றிடும் நோக்கத்துடன் செயற்படும் ஓர் அமைப்பாக, எமக்கும் இவ்வுலகத்தும் நல்லதைத் தரும் தாவர – அடிப்படையிலான தயாரிப்புக்கள் மூலம் Upfield எப்போதும் நுகர்வோருக்கான தேவைகளுக்கும் அவர்களது மன அழுத்தங்களுக்கும் தீர்வுகளுடன் வருவதை உறுதி செய்கிறது.
Astra Fat Spread, Astra Mayonnaise மற்றும் Astra Cooking Pack ஆகியவை அதன் உற்பத்தி வரிசையில் இடம் பிடிக்கின்றன. சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வினை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனமாக Upfield Sri Lanka ஆனது புதிய fat spread ஆன Astra Acti இனை அறிமுகப்படுத்தியுள்ளது. Astra Acti ஆனது A, D, B6, B9 மற்றும் B12 ஆகிய நுண்ணூட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டுள்ளதுடன், நோயெதிர்ப்புச் சக்தியின் இயல்பான செயற்பாட்டையும் ஆதரிக்கும். மேலும் சிறுவர்களின் உடல் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் தேவையான ஒமேகா 3 மற்றும் 6 ஆகியவற்றையும் உள்ளடங்கியுள்ளது. இவை இயற்கையாகவே சூரியகாந்தி மற்றும் கனோலாவிலிருந்து பெறப்படுகின்றன.
தாவர – அடிப்படையிலான ஓர் தயாரிப்பான Astra Acti ஆனது bad trans fats எனும் கெட்ட கொழுப்புகளிலிருந்து விடுபடுகிறது. அத்தோடு செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டிகள் உள்ளடக்கப்படாதது. மேலும் இதில் உள்ளார்ந்த கொலஸ்ட்ரோல் எதுவும் இல்லை. மிகமுக்கியமாக இது ஒரு மென்மையான fat spread ஆக விளங்குகிறது. அதனால் இன்றைய பிஸியான வாழ்க்கைக்கு உகந்ததாக இந்த Astra Acti பொருந்துகிறது. நீங்கள் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து வெளியே எடுத்த உடனேயே இதைப் பயன்படுத்தலாம். எனவே தாய்மாருக்கு வேலைப்பளு நிறைந்த காலை வேளையை சிறப்பாக நிர்வகித்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப உதவுகிறது.