வரிக்குப் பிந்தைய வருவாயை பதிவு செய்துள்ள JAT Holdings | தினகரன் வாரமஞ்சரி

வரிக்குப் பிந்தைய வருவாயை பதிவு செய்துள்ள JAT Holdings

மரப்பூச்சுகள் துறையில் முன்னணி வகிக்கும் JAT Holdings நிறுவனம், 2021/22 நிதியாண்டின் 3 ஆவது காலாண்டில், மந்தமான சந்தை நிலவரங்களுக்கு மத்தியிலும் சிறப்பான பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது.

குழுமத்தின் வரிக்குப்பிந்தைய இலாபம் கடந்தாண்டில் இதேகாலப்பகுதியில் காலாண்டில் பதிவாக்கப்பட்ட ரூபா 717 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 232%ஆல் அதிகரித்துள்ளது. அதேசமயம் கடந்த 12 மாதங்களுக்கான வரிக்குப்பிந்தைய இலாபம் ரூபா 1,102 மில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளது.

மதிப்பாய்வு செய்யப்படுகின்ற 9 மாதங்களில் வருவாய் 72%ஆல் அதிகரித்துள்ள அதேநேரத்தில் நிறுவனத்தின் மொத்த இலாப மட்டங்கள் 30%க்கு மேல் சீராகப் பேணப்பட்டுள்ளது. ஏற்றுமதி வருவாயின் பங்கும் முந்தைய ஆண்டில் பதிவாக்கப்பட்ட 9%உடன் ஒப்பிடுகையில் மொத்தவருவாயில் 22%ஆக உயர்வடைந்துள்ளது, முதலீட்டாளர்களும் பங்கொன்றுக்கான வருவாய் (கடந்த 12 மாதங்களுக்கான) ரூபா 2.16 ஆக இருப்பதை அறியும்போது மகிழ்ச்சியடைவார்கள். JAT Holdingsஇன் சிறந்த காலாண்டு என நிரூபிக்கப்பட்ட 4 ஆவது காலாண்டை நிறுவனம் தொடங்கும்போது இந்தமீள்எழுச்சியுடனான நிதியியல் பெறுபேறுகள் வெளிவந்துள்ளதுடன், பண்டிகைக்காலங்களின் காரணமாக வரலாற்று ரீதியாக வருவாய்க்கு பிந்தைய இலாபத்தில் பூச்சுக்கள் தொழிற்துறையின் பங்கு 45%ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் நிதியியல் பணிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான நிஷால் ஃபெர்டினாண்டோ கருத்து வெளியிடுகையில், “எங்கள் ஆரம்ப பொதுவழங்கல் நடவடிக்கை இடம்பெற்று ஆறுமாதங்களில், கடந்த காலாண்டில் நாங்கள் பதிவாக்கியுள்ள வலுவான பெறுபேறுகளை முதலீட்டாளர்களுக்கு சமர்ப்பிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். மந்தமான சந்தைச்சூழல் மற்றும் பிறசவால்கள், தளம்பலான நாணயமாற்று வீதங்கள் மற்றும் உலகளாவிய சந்தையில் பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றின் மத்தியில் இந்த அளவீடுகள் ஈட்டப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், நாங்கள் சந்தை நிலைமைகளுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றியமைத்து, அதன் போக்குகளுக்கேற்ப எங்களின் மொத்த இலாப மட்டங்களைப் பேணியுள்ளோம்.

Comments