![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/21/nw117.jpg?itok=uoMqwJwL)
விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி மல்லிகாரச்சி (பாலியல் நோய்கள் மற்றும் HIV தொடர்பான) தகவல், கல்வி, தொடர்பாடல், ஆலோசனை மற்றும் ஆணுறைகள் பிரசாரம் தொடர்பான தேசிய தொடர்பாடல் அதிகாரியுடன் ஒரு சந்திப்பு
இலங்கையில் எச்ஐவி தொற்றின் தற்போதைய நிலைமை எவ்வாறு உள்ளது?
HIV வைரஸை அறிந்துகொண்டு 40 லட்சம் தசாப்தங்களுக்கு பின்னரும் இலங்கை HIV/AlDS தொற்றுக்கான குறைந்தளவு வாய்ப்பினை கொண்ட நாடாகவே காணப்படுகின்றது. HIV பரவல் >0.1% மாகவே தொடர்ந்தும் நிலவுகின்றது. 2021ம் ஆண்டு முடிவில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த, HIV தொடர்களின் எண்ணிக்கை 4419 ஆகும். 2021 ஆம் ஆண்டில் புதிதாக 425 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட தோடு பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விகிதம் 5:1 ஆகும். 15 தொடக்கம் 24 வயதான வர்களுக்கிடையே HIV பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து காணப்படுகின்றது.
புதிய மதிப்பீடுகளின் படி தற்போது HIV தொற்றளர்கள் 3700 பேர் வரையில் உள்ளதோடு அவர்களில் HIV தொற்று நிலைமையை அறிந்தவர்களின் எண்ணிக்கை 70% என கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் 83% மானோர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
சிலர் இரத்தப் பரிசோதனைக்காக பாவிக்கப்படும் ஊசியின் ஊடாக HIV தொற்றை பரப்புவதற்கு முயற்சி செய்வதாகக் கூறி அண்மைய நாட்களில் ஊடகங்களில் ஒலிநாடாக்கள் சில பரப்பப்பட்டன. அதனைப் பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்? HIV பரவும் விதம் குறித்து தெளிவுபடுத்த முடியுமா ?
HIV தொற்று ஏற்படும் மூன்று பிரதான முறைகள்,
1. பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள்.
2. ரத்தம் மற்றும் ஏனைய அவயவ
திரவங்கள் ஊடாக.
3. தொற்றினையுடைய தாயிலிருந்து அவரது பிள்ளைக்கு.
நீங்கள் கூறிய ஒலிநாடாவை நானும் கேட்டேன். எவ்வாறாயினும் இந்த ஒலிநாடா மூலம் சமூகத்துக்கு தவறான கருத்து பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ரத்தம் மற்றும் சில அவயவ திரவங்கள் மூலம் எச்ஐவி பரவக்கூடும். ஆனால் அது புதிய ரத்தம் மற்றும் அவயவ திரவங்கள் மூலமாகவாகும். உதாரணமாக புதிய ரத்தம் காணப்படும் ஒரே ஊசியை பாவித்து குழுவாக போதைப் பொருட்களை பாவிக்கும் போதாகும். இரத்தப் பரிசோதனைக்காக பாவிக்கப்படும் ஊசியில் உள்ள இரத்தம் விரைவில் காய்ந்து விடும் அதனால் அந்த ஒலிநாடாவில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் அவர்கள் விவரிக்கும் விதத்தில் HIV தொற்று பிறருக்கு பரவ வாய்ப்பில்லை. இதற்கு முன்னரும் கூட திரைப்பட அரங்குகளில் மற்றும் கடற்கரைகளில் மனிதர்களால் HIV யை பரப்ப தொற்றுள்ள ஊசிகள் அவ்விடங்களில் போடப்பட்டன என ஒலி, ஒளி நாடாக்கள் மூலம் தெரிவிக்கப்பட்டன. சூரிய வெளிச்சம் மற்றும் வெப்பம் படும் போது இரத்தம் விரைவாக காய்ந்து போவதால் மற்றும் சூரிய வெளிச்சம் மற்றும் சூரிய வெப்பத்தால் HIV வைரஸ் அழிந்து போவதால் அந்த ஊசிகளில் HIV வைரஸ்கள் கொண்ட புதிய ரத்தம் காணப்படாது. ஆகவே இது உண்மையில் மனித வாழ்க்கையில் சாத்தியமானதல்ல.
இங்கு குறிப்பிட வேண்டிய இன்னுமொரு முக்கிய விடயம் , ரத்த பாவனையின் போது ஏதேனும் தொற்றுகள் உள்ளதா என பரிசோதிக்கும் போதும் சுகாதார ஊழியர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் அனைத்து நபர்களுக்கும் புதிய ஊசியையே பாவிக்கின்றார்கள். சுகாதார ஊழியர்கள் ரத்த மாதிரியை பெறுவதற்கும் மற்றும் ஊசிமருந்து ஏற்றுவதற்கும் புதிய ஊசிகளையே பயன்படுத்துகின்றார்கள். ஒருபோதும் பாவித்த ஒரு ஊசியை உங்கள் உடம்பில் செலுத்துவதற்கு நீங்கள் அனுமதிக்காதீர்கள்.
HIV தொற்று அவதானம் உள்ளவர்கள் யார்?
பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஒரே ஊசியை பாவித்து குழுவாக போதைப்பொருளை பாவிக்கும் எந்த ஒரு நபருக்கும் HIV தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால் சமூகத்தின் பொறுப்பான நபராக நாம் அனைவரும் HIV பரவல் தொடர்பாக அறிந்திருக்க வேண்டிய தோடு உங்களுக்கு HIV தொற்று ஏற்படக்கூடிய அவதானம் காணப்பட்டால் அதற்கான பரிசோதனையை செய்துகொள்ள எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
எவ்வறாயினும் சில நபர்கள் அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப அதிக அவ தானத்துக்கு உரியவர்களாக கருதப்படுகின்றார்கள். விசேடமாக பாதுகாப்பற்ற குதவழி உடலுறவில் ஈடுபடுபவர்கள், பலருடன் பாலியல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட நபர்கள், பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள், இறுதியாக ஒரே ஊசியை பலரும் பாவித்து போதைப் பொருளை பாவிக்கும் நபர்கள் என்போர் அவற்றுள் அடங்குவார்கள்.
HIV பரிசோதனை முக்கியமானது என நீங்கள் கூறினீர்கள்? ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
HIV பரிசோதனையை மேற் கொள்வதால் பல நன்மைகள் உண்டு.அதில் HIV என்பது கட்டுப்படுத்தக் கூடிய தொற்றாகும். ஆனால் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முதலில் அதனை அறிந்து கொள்ள வேண்டும். அறிந்து கொள்ளாமல் அதனை கட்டுப்படுத்த ஒருகாலமும் முடியாது. அதனால் தொற்றுக்குள்ளான நபரை அறிந்துகொள்ளும் ஒரே வழி HIV க்கான இரத்தப்பரிசோதனை ஆகும். விஷேடமாக நீங்கள் HIV தொற்று அவதானம் உள்ளவரானால் கட்டாயமாக HIV க்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.தேசிய பாலியல் நோய்கள்/ எய்ட்ஸ் தடுப்பு திட்டம் ஏனைய தரப்புடன் இணைந்து தொற்றினை தடுப்பதற்கு மற்றும் தொற்றுக்குள்ளான நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
தொற்றுக்குள்ளாவர்களை அறிந்து கொண்ட பின்னர் நாம் அவர்களுக்கு சிகிச்சைகள் மற்றும் ஏனைய சுகாதார சேவைகளை இலவசமாக பெற்றுக் கொடுக்கின்றோம். தாமதமின்றி HIV க்கான சிகிச்சையை ஆரம்பித்தால் தொற்றாளர்கள் எய்ட்ஸ் நோய்க்கு உள்ளாவதை தடுக்க முடியும் அதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் சாதாரண வாழ்வுக் காலத்தை வாழக் கூடிய சந்தர்ப்பத்தை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும். அதுமாத்திரமல்ல HIV தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் HIV பரவுவதையும் தடுக்க முடியும்.
அது மாத்திரமல்ல HIV இல்லாத நபரொருவர் எதிர்காலத்தில் தொற்றுக்கு உள்ளாவதை தடுப்பதற்கும் தேவையான ஆரம்ப பாதுகாப்பை மேற்கொள்ள முடியும் என்பதால் HIV நிலைமை பற்றி அனைவரும் அறிந்திருப்பது நல்லது. அது மனதுக்கு ஆறுதலை பெற்றுத் தருவதோடு நாம் நேசிப்பவர்களை HIV தொற்றிலிருந்து பாதுகாக்க மேலும் ஒரு சந்தர்ப்பத்தை பெற்றுத் தரும்.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் HIV பரவுவதை எவ்வாறு தடுக்க முடியும்?
நாம் தொடர்ந்து அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கும் போது அவர்கள் சரியான முறையில் நாள்தோறும் மருந்துகளை உட் கொண்டார்களானால் தொற்றுக்குள்ளான நோயாளியின் ரத்தத்தில் உள்ள வைரஸின் அளவு விரைவாக குறைவடையும். நாம் அதனை பின் வருமாறு " அறிந்து கொள்ள முடியாத அளவில் வைரஸின் அளவு குறைந்துள்ளது"என குறிப்பிடுகின்றோம். அதனால் அவ்வாறான தொற்றாளர்கள் மூலம் தொடர்ந்தும் நோய் ஏனையோருக்கு பரவாது. அதன் மூலம் நாட்டில் புதிய தொற்றாளர்களில் வீழ்ச்சி ஏற்படும்.
அவ்வாறென்றால் அதன்மூலம் அவர்களுக்கு அதன்பின்னர் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட முடியும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றதா?
இல்லை. வேறு பாலியல் ரீதியிலான நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அவர்கள் தொடர்ந்தும் ஆணுறைகளை பாவிப்பது நல்லது. முறையான சிகிச்சையுடன் அவர்கள் ஏனையோருக்கு இதனை பரவச் செய்ய மாட்டார்கள். ஆனால் HIV தொற்றை தவிர ஏனைய பாலியல் ரீதியாக பரவக்கூடிய தொற்றுக்கள் பல உள்ளன. அதனால் கொதோரியா, க்ளமீடியா, சிபிலிஸ், ஹெபடயிடிஸ் பீ போன்ற நோய்களில் இருந்து தன்னையும் ஏனையோரையும் பாதுகாப்பதற்காக HIV தொற்றுக்குள்ளான நபர்கள் எவ்வேளையிலும் ஆணுறையை பாவிக்கும்படி பரிந்துரைக்கின்றோம்.
தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தவிர HIV யை தடுக்கக் கூடிய வேறு வழிமுறைகள் உள்ளனவா?
ஆம், பாலியல் தொடர்புகளில் இருந்து விலகி இருப்பது மற்றும் ஒரு நம்பிக்கையான இணையுடன் மாத்திரம் உடலுறவை வைத்துக் கொள்வது பாலியல் நோய்கள்/ HIV யை தடுப்பதற்காக ஆரம்ப காலத்திலிருந்து பரிந்துரைக்கப்பட்ட முறைகளாகும். நான் முன்னர் குறிப்பிட்டவாறு HIV மற்றும் ஏனைய பாலியல் நோய்களை தடுப்பதற்கான சிறந்த முறை ஆணுறைகளை சரியான முறையில் மற்றும் தொடர்ந்தும் பாவிப்பது ஆகும்.
HIV சிகிச்சைக்காக வைத்திய விஞ்ஞானத்தின் அண்மை கால முன்னேற்றத்துடன் புதிய முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தொற்றாளர்களை அவமானமாக கருதுவது அவர்களை ஒரு படுத்திப் பார்ப்பது, HIV பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அரச கிளினிக்குக்கு வருவதை பலரும் தவிர்க்கிறார்கள்.அது பற்றி நீங்கள் என்ன கூற முடியும்?
ஆம் , HIV பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக பாலியல் நோய் கிளினிக்குக்கு வராது இருப்பதற்கு ஒரு காரணம் HIV தொற்று குறித்த அவமானம் மற்றும் சமூகம் ஒதுக்கி வைப்பது என்பனவாகும். எவ்வாறாயினும் பாலியல் நோய்க்கான கிளினிக்கில் உள்ள எமது பணியாளர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வரும் எந்த ஒரு நபரையும் அவர்கள் தரக்குறைவாக நடத்துவதில்லை நட்புடன் சேவைகளை பெற்றுக் கொடுக்க சரியான முறையில் பயிற்சிகளை பெற்றுள்ளார்கள்.
கிளினிக்கில் உள்ள சேவையாளர்கள் 100% ரகசிய தன்மையை பாதுகாப்பதோடு பாலியல் நோய்களுக்கான கிளினிக்குகளுக்கு வருவதற்கு யாரும் பயப்படத் தேவையில்லை. மேலும் விசேடமாக காத்திருப்பு காலத்தை குறைப்பதற்காக நபர்கள் கிளினிக்குக்கு வருவதற்கான புதிய சந்திப்பு முறை ஒன்றை நாம் அறிமுகம் செய்துள்ளோம்.
அது know4sure என்னும் இணையதளம் ஆகும். முதலில் நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கிளினிக்குக்கு வருவதென்றால் இந்த இணையதளம் மூலம் தங்களுடைய அவதானத்தை மதிப்பீடு செய்து நேரம் ஒன்றை ஒதுக்கிய பின்னர் கிளினிக்குக்கு வருகை தர முடியும்.