இரும்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இலங்கையின் முன்னணியாளராகத் திகழும் சிலோன் ஸ்டீல் கோப்ரேஷன் லிமிடட் (லங்வா) நிறுவனம் மிரிஜ்ஜவில ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் உள்ள லங்வா சன்ஸ்தா தொழிற்துறை வளாகத்தில்; இரும்பு மற்றும் கூரைத்தகடுகளை உற்பத்தி செய்வதற்கான இரு அதிநவீன உற்பத்தி வசதிகளுக்கு அண்மையில் அடிக்கல் நாட்டியிருந்தது. தொற்றுநோய்க்குப் பின்னரான சூழலில் மூலப்பொருட்களைக் கிடைக்கச் செய்து உள்நாட்டு கட்டுமானத் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய அமைச்சுப் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இந்தப் புதிய இரும்பு உற்பத்தி வசதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த இரும்பு உலோகக் குற்றிகளைப் பயன்படுத்தும் வழக்கத்திலிருந்து விலகி இரும்புத் துண்டுகள் கம்பிகள் மற்றும் கம்பி தயாரிப்பதற்கான முதன்மை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி புத்திசாலித்தனத்தை இலங்கைக்குக் கொண்டுவரும் இரும்புத் தொழிற்சாலையாக இது விளங்கும். இந்தப் பின்தங்கிய ஒருங்கிணைப்பானது தற்போதைய நேரத்தில் பில்லியன் கணக்கான டொலர்களை உள்நாட்டுக் பொருளாதாரத்துக்கு சேமிப்பதாக அமையும்.
சுற்றாடல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நடைமுறைகள், வழிமுறைகளைப் பின்பற்றுவதால் இந்த உற்பத்தி வசதியானது நீடித்து நிலைப்பதாக இருக்கும். இதன் உற்பத்திச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதும் வருடமொன்றுக்கு 600,000 மெற்றிக்தொன், இருப்புத் துண்டுகள் உலோக உருளைகள் மற்றும் இரும்பு வயர்கள் உற்பத்தி செய்யப்படும். இது எதிர்காலத்தில் இலங்கையைத் தன்னிறைவடையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலதிகமான உற்பத்திகள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் ஊடாக ஏற்றுமதி செய்யப்படும்.