![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/03/20/a24.jpg?itok=PPo1gwOe)
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான கௌரவ நாமல்ராஜபக்ஷவுக்கு 2022ஜனவரி 20ஆம் திகதியன்று ஸ்ரீஜெயவர்தனபுர கோட்டே மொனார்க் இம்பீரியலில் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வைபவமொன்றில் Ebony Holdingsஇன் பணிப்பாளர் சபைத்தலைவரான ரஸ்மிரஹீம் அவர்களால் விசேட பாராட்டுச்சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உதைப்பந்தாட்ட விளையாட்டையும், அதனுடன் தொடர்புடைய ஏனைய விளையாட்டுகளையும் வளர்ப்பதில் அமைச்சரின் உண்மையான மற்றும் அதிசிறந்த ஈடுபாட்டைப் போற்றிப் பாராட்டும் வகையில் இச்சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
Ebony Holdings ஆனது இலங்கையில் உதைப்பந்தாட்டத்திற்கான இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ கூட்டாளரான Vantage என்ற ஆண்களுக்கான முதன்மையான ஆடைகள் வர்த்தகநாமத்தின் பின்னால் உள்ள நிறுவனமாகும்.
Ebony Holdings நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத்தலைவரான ரஸ்மிரஹீம் அவர்கள் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “நாமல்ராஜபக்ஷ ஆசியாவிலேயே விளையாட்டுத்துறைக்கான இளம் அமைச்சர்களில் ஒருவர் என்பதுடன், விளையாட்டுக்காக, குறிப்பாக உதைப்பந்தாட்டத்தில் அவர் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் ஆழ்ந்த ஈடுபாட்டைக் காண்பது எமக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. Vantage உத்தியோகபூர்வமாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் கைகோர்த்துள்ளதுடன், நமது நாட்டில் உதைப்பந்தாட்டத்தின் மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புக்காக கணிசமான வளங்களையும் நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். இது தொடர்பான எங்கள் பணியின்போது, அமைச்சரின் ஆதரவை நாங்கள் எப்போதும் உறுதிசெய்துள்ளோம். எனவே, மாண்புமிகு அமைச்சரின் ஆதரவு மற்றும் தொலைநோக்குடனான இலக்கிற்காக நாம் அவரைப் போற்றிப் பாராட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இலங்கையின் ஆண்களுக்கான சிறந்த நவநாகரிக இலச்சினைகளில் ஒன்றாக இருப்பது, உதைப் பந்தாட்டத்தை ஆதரிப்பதில் Vantage இற்கு ஒரு இயல்பான படியாகும். இலங்கையில் இந்த விளையாட்டு இன்னும் வளர்ச்சியடைந்து வருவதை நிறுவனம் புரிந்துகொண்டு, இலங்கையில் உதைப்பந்தாட்டத்தின் மீது முதலீடுசெய்து, குறிப்பாக நிதியுதவி அடிப்படையில் அதனை வளர்க்க வேண்டியதன் அவசியத்தைப் போற்றுகிறது. இவ்வாறாக, இலங்கையில் உதைப்பந்தாட்டத்தை தொடர்ந்து அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்துடன் கைகோர்ப்பதில் Vantage மிகவும் மகிழ்ச்சியடைகிறது.