இலங்கையின் முன்னணி Industrial 4.0 மாற்றத்தை நடைமுறைப்படுத்துகின்ற மற்றும் தொழில்துறை தன்னியக்க (Industrial Automation) தீர்வுகளின் வழங்குநருமான UTECH Technologies (Pvt) Ltd. ஆனது, National Best Quality Software Awards (NBQSA) 2021 (சிறந்த தேசிய தரம் வாய்ந்த மென்பொருள் விருதுகள்) விழாவில், தங்களது புதுமையான வன்பொருள் மற்றும் மென்பொருளுக்காக 2 தங்க விருதுகளை வென்றுள்ளது.
இந்த தேசிய ICT விருதுகளை வென்றதன் மூலம், UTECH ஆனது, ஆசியா பசுபிக் ICT சங்க விருதுகள் 2020/21 இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரிய வாய்ப்பையும் பெற்றுள்ளது. அத்துடன் 'Internet of Things' ஆண்டின் தொழில்நுட்பத்திற்கான ஒட்டுமொத்த தங்க விருதை வென்றுள்ளதன் மூலம் இலங்கைக்கு பெருமையை கொண்டு வந்ததில் நிறுவனம் பெருமை கொள்கிறது. தொழில்நுட்பத்தில் முன்னோடியான சீனா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஆசிய பசிபிக் நாடுகளுடன் போட்டியிட்டு வருடத்திற்கான தொழில்நுட்ப விருதுகளை அது வென்றுள்ளது.
வன்பொருள் மற்றும் மென்பொருள் உள்ளிட்ட அனைத்து IoT சார்ந்த தொகுதிகளையும் வடிவமைத்து, மேம்படுத்தி, உற்பத்தி செய்யும் இலங்கையில் உள்ள ஒரே தொழில்நுட்ப நிறுவனமாக UTECH திகழ்கின்றது. இது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அவசியமான பிரத்தியேக தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பயனாக்கக்கூடிய பாதுகாப்பாக ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு இறுதித் தீர்வை வழங்குகிறது.
UTECH இன் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பமான Blackbox உள்ளிட்ட ஏனைய புத்தாக்கமான தயாரிப்புகளான Smartnode, Coollink மற்றும் Smart Energy Meter ஆகியன தனிப்பயனாக்கக்கூடிய மற்றும் செலவு குறைந்த telematic gateways (தொலைதூர இயக்கத்திற்கான பாதைகள்) ஆகும். அவை பரந்த அளவிலான தொழில்துறை தன்னியக்கம் மற்றும் பிரதான, துணை தொழில்துறை இயந்திரங்களின் உற்பத்தித்திறனைக் கண்காணிக்கும்.
UTECH வழங்கும் தீர்வின் தனித்துவமான அம்சம் யாதெனில், இயந்திர சென்சர்கள், இயந்திரக் கட்டுப்படுத்திகள் அல்லது இயந்திரத்தின் PLCக்களில் நேரடியாக தொடுவதன் மூலம் இயந்திரங்களில் தடையற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதாகும்.