இன்று முழுஉலகமும் பல்வேறு பிரச்சினைகளுக்குள் சிக்கியிருக்கின்றது. கொவிட்தொற்றானது உலக பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமானதல்ல. உலக பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளுவதற்கு இலங்கை போன்ற சிறிய நாடுகளால் முடியாது. அதன் ஆரம்ப வீழ்ச்சியானது எமது பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய தாக்கத்தை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுநாட்டின் அனைத்து சேவைகளிலும் நெருக்கடிகள் உருவாக்கியது. சிலபிரச்சினைகள் காணப்படுவது தீர்த்து வைக்கக்கூடிய எல்லைக்கு அப்பாலாகும். இவைகளைப் புரிந்துகொள்ளக்கூடிய அறிவார்ந்த சமூகம் இருக்க வேண்டியதன் அவசியம் முன்னொரு போதும் இல்லாத வகையில் உணரக்கூடியதாக உள்ளது. எனவே கடந்துசென்று கொண்டிருக்கக் கூடிய இந்த காலத்தை பொறுமையுடனும், பயனுள்ளவகையிலும் கடத்த வேண்டியுள்ளது.
கொவிட்19தொற்றினால் பாதிக்கப்பட்ட அனேக நாடுகள் இன்னமும் மீளுவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்களுக்காக தமது நாடுகளுக்கு அழைத்துக்கொள்ள வீசா வழங்காத காரணங்களினாலும் வளரும் நாடுகளுக்குப் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதன்காரணத்தினால் டொலர் கிடைக்கும் அல்லது அந்நியச் செலாவணி வருவது அந்த நாடுகளுக்கு பெரும் நெருக்கடியாக ஆகியிருக்கின்றது. வெளிநாட்டுக் கல்வியைப்போன்று வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்களையும் இழந்து இதனிடையே இலங்கையும் பெரும் பொருளாதார பாதாளத்திற்குள் வீழ்ந்துள்ளது.
அரசாங்கத்தைப் பற்றி கூறப்படும் கதைககள்
இந்நிலையின் உச்சகட்டம் இப்போது வந்திருக்கின்றது. அவை அனைத்தின்கீழ் இந்நாட்டு பொருளாதாரம் சரிவடைந்தது பார்த்துக்கொண்டிருக்கும் போதேயாகும். இந்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பும் வேகமாகக் குறைவடைந்து சென்றது. இவை அனைத்திற்கும் மத்தியில் சிலஅரசியல்வாதிகளின் முட்டாள்தனமான செயற்பாடுகளினால் நாட்டிற்கு கிடைக்கும் அவமதிப்பும், அதன்ஊடாக நாட்டு மக்கள் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் மீது ஏற்படுத்திக் கொள்ளும் விரக்தியும் அதிகரிக்கின்றது. சிறைச்சாலைக்குள் சென்று சண்டித்தனம் காட்டுதல், அமைச்சர்களைப் போன்று தந்தைமாரின் ஊக்கத்தினால் மக்களுக்கு சண்டித்தனம் காட்டும் மகன்களின் காரணமாகவும் அரசாங்கத்திற்கு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. சிலகாலங்களுக்குமுன்னர் கிளப்மோதலின் காரணமாக கலாநிதி பட்டம்பெற்ற முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனின் பெயர் தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் பிரசாரம் செய்யப்பட்டது
இவை அனைத்திற்கு மத்தியில் நாட்டை ஆட்சி செய்யவேண்டியுள்ள ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு முகங்கொடுக்கவேண்டியுள்ள பிரச்சினைகளும், நெருக்கடிகளும் கொஞ்ச நஞ்சமானதல்ல. அரசாங்கத்திலேயே இருந்துகொண்டு, அரசாங்கத்திலேயே சலுகைகளைப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினர் ஒருபுறத்தில் இருந்துகொண்டு தமது நலன்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமக்கு நன்மைகிடைக்கும்போது அரசாங்கம் நல்லது. தமக்கு தீயது நடக்கும்போது, ஊழல் மோசடிகளைச் செய்யகிடைக்காதபோது அரசாங்கம் கூடாது.
முக்கியமாக மின்சாரசபையில் இடம்பெறும் பொறியியலாளர் மாபியாவும் இவற்றில் முதன்மை வகித்தன. எந்த அமைச்சராலும் இந்த பொறியியலாளர் மாபியாவைத் தடுப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை. அவசரநிலைமைகளில் பயன்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட மின்உற்பத்தி இயந்திரங்கள்கூட தற்போது செயலிழந்துபோயுள்ளன. மின்சார நெருக்கடிக்காக குற்றம் சுமத்தப்படுவதுஆட்சியாளர்கள் மீதேயாகும். பொறியியலாளர்கள் உள்ளிட்ட மாபியாகாரர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் மற்றும் ஊழல்மோசடிகளினால் மின்சாரவிநியோகத்தைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு முடியாது போயிருக்கின்றது. அத்துடன் இந்தியன் ஒயில் நிறுவனம் இலாபம்ஈட்டும்போது எரிபொருள் கூட்டுத்தாபனம் ஏன் கோடிக்கணக்கில் நஷ்டத்தை சந்திக்கின்றது? ஊழல் அதிகாரிகளின் அனைத்தும் செல்வது அரசாங்கத்தின் கணக்கிற்கேயாகும்.
இவை அனைத்திற்கும் மத்தியில் 13மணிநேர மின்துண்டிப்பினால் அழும்நிலையிலிருந்த மக்களின் கண்களில் விரல்களால் குத்துவது போலிருந்தது. அதுகடந்த 31ம்திகதி வெடிக்க ஆரம்பித்தது. இதன் ஆரம்பம் கடந்த வெள்ளிக்கிழமை பகல் எல்பிட்டி, வவுனியா, ஹட்டன், பலப்பிட்டி போன்ற இடங்களி ல்இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களினால் ஏற்பட்டது.
மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் ஆரம்பம்
அந்த ஆர்ப்பாட்டங்களின் மற்றுமோர் பிரதிபலனாகவோ என்னவோ அன்று மாலை நுகோகொடை ஜூப்லி கோபுரத்திற்கு அருகில் ஒன்று கூடியதரப்பினர் கேஸ், மின்சாரம், டீசல் போன்றவற்றைக்கேட்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை ஒருமணிநேரத்திற்கு பன்மடங்காக அதிகரித்தது. முக்கியமாக முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் கூலித்தொழிலாளர்களும் விரைவாக அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர். அத்துடன் தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் முகநூல் ஊடாக இந்நிகழ்வு நேரடி ஒளிபரப்புசெய்யப்பட்டதைத் தொடர்ந்து வீடுகளிலிருந்தவர்களும், கடைகளிலிருந்தவர்களும் விரைந்துவந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர்.
நினைத்ததைவிட பெருந்திரளானோர் ஒன்றுகூடியதன் காரணமாக ஒன்றுகூடியிருந்தவர்கள் எதிர்ப்பு கோசங்களை எழுப்பியவாறு மஹரகம- தெஹிவளை119ம் இலக்க வீதிமுழுதும் சென்று எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர். சிறிது நேரத்தில் 119ம்இலக்க வீதி முற்றாக தடைபட்டது. அத்துடன் வாகனங்களுக்கு டீசல் பெறுவதற்காக வரிசையில் நின்றவர்களும் வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டனர். கூடியிருந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றபோது நிலைமை சூடு பிடிக்கத்தொடங்கியது. அவர்கள் ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள பெங்கிரிவத்தை பிரதேசத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள். நிலைமை அந்தளவுக்கு நல்லதாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட நுகோகொடை பொலிஸ்பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அனைவரும் அப்பிரதேசத்தின் பாதுகாப்புக்காக அங்குவந்தனர். மக்கள் அலைஜனாதிபதியின் இல்லத்தை நோக்கிச்செல்வதைத் தடுப்பதற்கு அவர்கள் முயற்சித்தனர்.
சூடுபிடித்தல்
ஜனாதிபதியின் வீடு அமைந்துள்ள திசையை நோக்கிச் சென்றவர்களைக் கட்டுப்படுத்துவது முடியாதகாரியம் என்பதைத் தெரிந்துகொண்டதன் பின்னர் பாதுகாப்புத்தரப்பினரால் கலகம் அடக்கும் பிரிவினரையும், பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரையும் அழைத்துக்கொண்டனர்.
இரவு 8.00மணியளவில் நிலைமை தீவிரமடைந்திருந்ததோடு, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு முடியா தநிலையில் இராணுவத்தினர் அவ்விடத்திற்கு வரவழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் வந்திருந்த சிலர் தலைமைத்துவத்தை மேற்கொண்டு இதனை வழிநடாத்திய முறையினையும் அறிந்து கொள்ள முடிந்துள்ளது. எந்தஒரு அரசியல் தலைவரையும் அவ்விடத்தில் காணக் கிடைக்கவில்லை. இறுதியில் இரவாகும் போதுவந்திருந்த வாகனங்களும் இவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் சிறிதுநேரம் வாகனங்களை நிறுத்திக்கொண்டு ஹோர்ன் ஒலியை எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பாதுகாப்புப் படையினரைத் தவிர வேறு எவரும் வன்முறையைக் கட்டுப்படுத்தவோ அல்லது அவர்களை அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தவோ நடவடிக்கை எடுக்காததால், நிலைமை தீவிரமடைந்தது.கலவரத்தை அடக்குவதற்காக இரவு9.35மணியளவில் பெங்கிரிவத்தை பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இருளில் அங்கிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள் என்று எண்ணியே அவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மனக்குமுறல்
எனினும் நடந்ததோ வேறு ஒன்றாகும். மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அவர்கள் ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கிச் செல்வதற்கு அவசரப்பட்டார்கள். நிலைமையினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கண்ணீர் புகைப்பிரயோகம் மற்றும் தண்ணீர்பிரயோகம் போன்றவற்றை மேற்கொள்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். அந்ததாக்குதல்களுக்கு முகங்கொடுத்தவாறு அதற்கு எதிராக முன்னேறிச் சென்றவர்கள் பொலிஸ் வீதித்தடைகளையும் புரட்டிப் போட்டார்கள். அவ்வாறு வந்தவர்களுக்கு வீட்டுக்கு அருகில் செல்வதற்கு முடியாதவாறு இறப்பர் குண்டுவேட்டுக்களை மேற்கொள்ளப்பட்டன.
அந்நிலையில் இராணுவத்தினரும் அவ்விடத்திற்குவந்ததோடு, அவர்கள் வந்த பஸ்வண்டிக்கும் கலவரக்காரர்களால் தீவைக்கப்பட்டது. அத்துடன் இறப்பர்குண்டுத் தாக்குதலால் கோபமடைந்தவர்கள் பொலிஸார்மீது கற்களைக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டனர். அத்துடன் அங்கு வந்த பாதுகாப்புதரப்பினரின் வாகனங்களின் மீதும் அவர்கள் தாக்குதலை மேற்கொண்டனர்.
இதன்போது பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு முன்னால் சென்ற மோட்டார்சைக்கிள் ஹெல்மெட் அணிந்திருந் தஇளைஞர் ஒருவர் தனது மனக்குமுறல்களை அவர்களிடம் வெளிப்படுத்தினார்.
அது சமூகஊடகங்களில் இன்னமும் வைரலாகி வருகின்றது. தான் வீட்டில் இருந்ததாகவும், இந்தப் போராட்டத்தைப் பார்த்து அவ்விடத்திற்கு வந்ததாகவும் அவ்விளைஞர் கூறினார். பொலிஸாரும் தம்மோடு இணைந்து இந்தப் போராட்டத்தில் பங்காளர்களாக ஆகவேண்டும் என்றும் அவ்விளைஞர் கூறினார். நாட்டுமக்கள் பசியினால் இருட்டில் வாழ்வதாகவும் அவ்விளைஞர் குறிப்பிடுகின்றார். சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்காளர்கள் என்றும் அவ்விளைஞர் அங்கு குறிப்பிட்டார்.
எனினும் பொலிஸ் அதிகாரிகள் அவ்விளைஞரைத் தாக்கவோ அல்லது திட்டவோஇல்லை. படிப்படியாக அவர்களை அப்புறப்படுத்துவதற்கு முயற்சித்தனர். பின்னர் இராணுவத்தினர் வருகைதந்து நிலைமையினைக் கட்டுப்படுத்தும்போது அனேக விடயங்கள் நடந்து முடிந்து விட்டிருந்தன. இதனிடையே பொலிஸ்மா அதிபரின் உத்தரவில் நுகேகொடை, பெங்கிரிவத்தை பிரதேசம், கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு உள்ளிட்ட பலபிரதேசங்களுக்கு ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
அந்நேரம் இரண்டு பஸ்கள், ஜீப் வண்டி ஒன்று, முச்சக்கரவண்டி ஒன்று மற்றும் ஒருமோட்டார்சைக்கிளும் போராட்டக்காரர்களால் தீவைத்து அழிக்கப்பட்டிருந்தது. அத்துடன் தண்ணீர் தாக்குதல் வண்டிக்கும்சேதம் ஏற்படுத்தப்பட்டது.
உடமைகள் சேதம்
இச்சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடையே 24பொலிஸாரும் அடங்குகின்றனர். 5பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருவதோடு, அவர்களுள் உதவிபொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் உள்ளார். அத்துடன் நுகோகொடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியும் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவர்கள் அனைவரும் களுபோவில மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயங்களுக்கு உள்ளானவர்களுள் இச்சம்பவத்தி ல்செய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலரும் உள்ளனர். அத்துடன் இச்சம்பவத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரை வன்முறையாளராகக் கருதி பொலிஸார் கைது செய்திருப்பது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளது.
வன்முறையில் ஈடுபட்ட 45பேர் அச்சந்தர்ப்பத்திலேயே கைதுசெய்யப்பட்டதோடு, பின்னர்9பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடையே இளயும் யுவதி ஒருவரும் உள்ளார். அவர்கள் அனைவரையும் கடந்தவெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதேவேளை இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்ற இடத்திற்கு கறுப்புஆடைஅணிந்து, தலைக்கவசம் அணிந்தநிலையில் சென்றிருந்த தரப்பினர் தொடர்பிலும் பாதுகாப்பு தரப்பினர் விஷேட கவனம்செலுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இதுதொடர்பான விசாரணைகள் தற்போது குற்றவிசாரணைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்குப் புறம்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும், மிரிஹான மோசடி ஒழிப்பு பிரிவினரும், நுகோகொடை பொலிஸாரும் தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரதேசத்தின்பாதுகாப்பிற்காகஇராணுவம்மற்றும்பொலிஸ்விசேடஅதிரடிப்படையினரும்தற்போதுஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
39மில்லியன் ரூபாய் இழப்பு
மிரிஹானவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் இதுவரைக்கும் மதிப்பிடப்பட்டுள்ள உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 39மில்லியன் ரூபாயாகும் என இதுதொடர்பில் கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன் இதுதொடர்பில் அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு, நுகோகொடை, ஜூப்லி கோபுரத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதிகள் குழுவினர் வன்முறையில் ஈடுபட்டு குழப்பகரமான சூழ்நிலையினை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இரும்புத்தடிகள், கத்திகள், பொல்லுகளுடன் வந்துள்ள இந்தகுழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தூண்டிவிட்டு மிரிஹான பெங்கிரிவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கிப்பயணித்து குழப்பகரமான நிலையினை ஏற்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டவர்களுள் அனேகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களுள் அதிகமானோர் ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதிகள் என உறுதியாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள்“அரபிய வசந்தத்தை” இந்நாட்டில் ஏற்படுத்துவோம் என்றகோசத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துச் சென்றதாகவும், இது மிகவும் திட்டமிட்ட வகையில் பெயர்குறிப்பிடாமல் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் இந்தவன்முறை நிலையினை ஏற்படுத்தியதாகவும் கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து தெரியவந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைகள்திணைக்களம்உள்ளிட்டவிசாரணைக்குழுக்களின்முன்னால்அனைத்தும்வெளிவரும். ஆவேசமடைந்துள்ள மக்களைப்பயன்படுத்திக்கொண்டு தவறான நன்மைகளைப்பெற்றவர்கள்தொடர்பிலும்விடயங்கள்வெளிவரும்.
பலதசாப்தங்களுக்கு முன்னர் நாரஹேன்பிட்டவில் இடம்பெற்ற மேதினகூட்டம் மற்றும் புறக்கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் சாரமரியாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்குப் பாதுகாப்புத்தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ளாததற்கான காரணம் அவர்களை வழிநடாத்திய தலைமைத்துவமே அன்றி பலவீனமல்ல. பொலிஸ் அதிகாரிகளின் முன்னால் நாடகமாடிய இளைஞருக்கு அதற்கான பலம் கிடைத்ததும், பொலிஸ் அதிகாரிகளின் முன்னாலேயே “நாட்டின் அழிவுக்கு ஊடகங்களும், சமயத் தலைமைகளும் பொறுப்புக் கூறவேண்டும்எ ன்றும், இந்தப் போராட்டத்தில் பாதுகாப் புத்தரப்பினரும் இணைந்து கொள்ள வேண்டும்” என்றும் குரல் எழுப்புவதற்கு அவரால் முடிந்தது அதற்கான சுதந்திரம் கிடைத்திருப்பதனாலாகும்.
எனினும் இந்த பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு நாட்டைக் கவிழ்ப்பதாலோ, வாகனங்களுக்கு த்தீவைப்பதாலோ அல்லது பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்துவதாலோ வழிகிடைக்காது என்பதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அவர்களை அடிமைகளாக்கி அரசியல் இலாபத்தையோ அல்லது வேறுபலன்களையோ பெற்றுக்கொள்வதற்கான தரப்பினர் உருவாவது மாத்திரமேயாகும்.
தாரக விக்ரமசேகர
தமிழில்- எம். எஸ். முஸப்பிர்
(புத்தளம்விசேடநிருபர்)