வாகன மின்கலத்துறையில் 30ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட, இலங்கையின் முன்னணி இறக்குமதியாளர்களும் விநியோகஸ்தர்களுமான, டக்ளஸ் அண்ட்சன்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (Douglas & Sons - DSL), Panasonic Japan Valve Regulated Lead-Acid (VRLA) starter மின்கலத்தை இலங்கையின் Hybrid வாகனசந்தையில் அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. புதியPanasonic Japan VRLA மின்கலமானது, பிரத்தியேகமாக Toyota, Mitsubishi, Mazda and Nissan ஜப்பானிய ஹைப்ரிட் வாகன மாதிரிகளான Aqua, Axio, Prius, Outlander, Mazda 3, CX5, X-Trail ஆகியவற்றின் மின்கலத் தேவையினை பூர்த்திசெய்ய வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், வீதியில் வலம் வரும் அனைத்து Hybrid கார்கள் மற்றும் SUV களின் மின்கலமாற்றீட்டுக்கான அசல் மின்கலமாகவும் இது அமைந்துள்ளது.
Panasonic Japan VRLA மின்கலமானது, மிகவும் நம்பகமான ஜப்பானிய தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது என்பதுடன், இது பல தசாப்தங்களாக இலங்கையர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. மிகநீடித்த, முழுமையாக சீல்செய்யப்பட்ட, பராமரிப்பு அவசியமற்ற மின்கலமாக இதுதரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Hybrid மின்கலத்துக்கு மிதமாக சக்தியை வழங்குவதுடன், பயணிகளுக்கு 100% பாதுகாப்பையும் வழங்குகிறது. இதன்ஆயுள் தொடர்பில் கவனிக்கும்போது, Panasonic Japan VRLA மின்கலமானது, எந்தவொரு பராமரிப்பும் இல்லாமல் 3 - 4 ஆண்டுகள் வரை நீடித்து நிலைக்கக்கூடியன. ஒரு வால்வின் ஊடாக காற்றை வெளியிடும் வகையில் முழுமையாக சீல்செய்யப்பட்ட இம்மின்கலம், அதன் நேர்த்தியான வடிவமைப்பு காரணமாக, சாதாரண மின்கலங்களில் காணப்படும் பிரச்சினையான, அமிலம் கசியாமல் இருப்பதை உறுதிசெய்கிறது. வாயுசீராக்கி (A/C), சென்சர்கள் மற்றும் மிகமுக்கியமாக Hybrid மின்கலம் உள்ளிட்ட முக்கிய உட்புற்பாகங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு என்பன தொடர்பில் மிகக்கரிசனையாக செயற்படும்வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. மின்கல வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம் என்பன வாகனத்தின் ஆரம்பமின் கலம்போன்றவகையில் அமைக்கப்பட்டிருக்கும். எனவே இம்மின்கலம் வாகனம் மற்றும் Hybrid மின்கலம் ஆகிய இரண்டிற்கும் ஏற்றதாக அமைகின்றது. அத்துடன்ஒரு starter மின்கலத்தை, சாதாரணஈய-அமிலமின்கலத்தை கொண்டு மாற்றீடு செய்வது பொருத்தமானதல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.