ZEISS KINEVO 900 Neuro Microscope கொண்டுள்ள இலங்கையின் முதலாவது தனியார் மருத்துவமனையாக Durdans | தினகரன் வாரமஞ்சரி

ZEISS KINEVO 900 Neuro Microscope கொண்டுள்ள இலங்கையின் முதலாவது தனியார் மருத்துவமனையாக Durdans

கொழும்பு 03இல் அமைந்துள்ள Durdans மருத்துவமனை, அதன் சத்திர சிகிச்சை செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், உலகத்தரம் வாய்ந்த ZEISS KINEVO 900 Neuro Microscope யினை நிறுவியுள்ளது. அந்த வகையில் இவ்வகையான நுணுக்குக்காட்டியை பொருத்தியுள்ள இலங்கையின் முதலாவது தனியார் மருத்துவமனையாக Durdans திகழ்கின்றது. சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் உள்ளூர் சுகாதாரத் துறையை மேம்படுத்த வேண்டும் எனும் முயற்சிகளுக்கு அமைய, இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, இதற்கான பணிகளை அண்மையில் நிறைவு செய்திருந்தது.

1945ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Durdans மருத்துவமனையானது, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் எனும் எளிய தத்துவத்தை நோக்காகக் கொண்டு, மருத்துவத் துறையில் சிறப்பானவற்றையும், புத்தாக்க கண்டுபிடிப்புகளையும் இப்பிராந்தியத்தில் அறிமுகப்படுத்தி அதில் அதன் நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளது. இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, Durdans மருத்துவமனையானது, DIMO உடன் இணைந்து, அதிநவீன நுணுக்குக்காட்டியான ZEISS KINEVO 900 இனை நிறுவுவதற்கான முயற்சியை எடுத்துள்ளது. இது அறுவை சிகிச்சை நிபுணரால் இயக்கப்படும் ஒரு புதிய ரோபோவியல் காட்சிப்படுத்தல் தொகுதியாகும். இது அறுவைசிகிச்சை நுணுக்குக்காட்டியின் செயற்பாட்டை, விசேட ரோபோ செயற்பாட்டு கட்டுப்பாட்டு அமைப்புகளுடன், 4K தரத்தில் அமைந்த, முப்பரிமாண (3D) காட்சிப்படுத்தலாக வெளிப்படுத்துகிறது.

Comments