நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உடனடி அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு உடனடி அவசியம்

நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை போக்கவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உறுதிப்படுத்தும் அதேவேளையில் சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளையும் மீட்டெடுக்க உறுதியான நிரந்தரத் தீர்வுகள் இருக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

நாட்டின் ஊழல் மற்றும் தோல்வியுற்ற அரசியலை மாற்றுவதற்கும், நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், தற்போதைய  எரிபொருள்,சமயல் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கான வழியைக் காண நாட்டு மக்கள் விரும்புவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலபாகே தெரிவித்தார்.

மற்றும் மின்சார நெருக்கடி. மக்களின் அனைத்து முயற்சிகளுக்கும் மத்தியில் சில அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் பொது முயற்சியை தங்கள் ஆதரவுடன் செய்ததாகக் கூறி முத்திரை குத்த முயற்சிக்கின்றனர் என்றார்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்குவதிலும் அந்த இலக்குகளை அடைவதிலுமுள்ள ஆர்வம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.நாட்டில் கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு போதுமான எரிபொருள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

எனவே, சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் கடமைகளுக்குச் சமுகமளிக்க முடியாத காரணத்தால் மருத்துவமனைத் துறை முடங்கிக் கிடக்கிறதென கொலபாகே கூறினார். நிலையான தீர்வுகளை விவாதிக்கவும் பரிந்துரைக்கவும் யாரும் முன்வரவில்லையென்றும் அவர் கூறினார்.

Comments