எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் ஆடி அமாவாசை விரதத்தை வீதியில் வைத்தே நிறைவுசெய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இவர் வீதியில் வைத்தே விரத உணவை உட்கொண்ட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆடி அமாவாசை தினம் வியாழக்கிழமை பிதிர்களுக்காக விரதம் இருந்து, மதியம் படையல் செய்து, அந்த உணவை உட்கொண்டு தமது விரதத்தை நிறைவு செய்வார்கள்.
சம்பவ தினமும் இவ்வாறு எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த ஒருவர் தமது விரதத்தை வீதியில் வைத்தே நிறைவுசெய்து கொண்டார்.