![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/30/a13.jpg?itok=GqaNQleY)
ஜனாதிபதி மாளிகையிலிருந்த ‘அயர்ன் பொக்ஸ்’ திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 09ஆம் திகதி கொழும்பு ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது சந்தேகநபர் இந்த அயர்ன் பொக்ஸை திருடிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, கொழும்பு 13பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அலரி மாளிகையில் இரண்டு தொலைக்காட்சிகளை திருடியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.