![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/07/30/a10.jpg?itok=HOaJEsnZ)
கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையிலிருந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் போது பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆக்கிரமித்தபோது, இந்த நபர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியைத் திருடிச்சென்றுள்ளார்.
இந்நபர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இலட்சினை கொடியை, படுக்கை விரிப்பாக பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளிகளையும் பகிர்ந்திருந்தார்.
சி.சி.டி.வி. காணொளிகளை ஆதாரமாக்கொண்டு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 54வயது நபரென பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபர், ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் களுதந்திரிகே உதேனி ஜயரத்ன என பொலிஸார் தெரிவித்தனர்.