![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/08/14/a35.jpg?itok=qXpvlnbk)
எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டதோடு இந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் மண்டபத்துக்கு வருகை தந்த அரச கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட கொள்கை விளக்க உரை தொடர்பாக பாராளுமன்ற விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது அதில் கலந்து கொள்வதற்காக பாராளுமன்றத்துக்கு வருகை தந்த வஜிர அபேவர்த்தனவை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வராண்டாவில் சந்தித்தார்கள்.
அங்கு வஜிரவை கண்ட அவர்கள் அவரின் அருகில் வந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு அனுப்பியது, அவருக்கு பிரதமர் பதவியை பெற்றுக் கொடுத்தது, ஜனாதிபதி பதவியை பெற்றுக் கொடுத்தது போன்ற விசேட சந்தர்ப்பங்களில் அருகில் இருந்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஞாபகப்படுத்தி அவரை பாராட்டினார்கள்.
அவர்களின் கருத்துகளுக்கு செவிமடுத்த வஜிர கூறியதாவது நாடு முகம் கொடுத்துள்ள சவால்களை வெற்றி கொள்வதற்காக பாரிய மற்றும் முறையான நடவடிக்கைகள் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தில் பொது மக்களின் பிரதிநிதிகளாக எம் அனைவரினதும் பொறுப்பு அத்திட்டங்களை வெற்றியடைய செய்து நாடு தற்போது முகம் கொடுத்துள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும். அதற்காக ஜனாதிபதியின் திட்டங்களை வெற்றி பெற செய்வதற்கு உங்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் வஜிர தெரிவித்தார்.
வஜிரவின் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அவ் அணியினர் எவ்வித தயக்கமும் இன்றி ஜனாதிபதியின் திட்டங்களுக்கு பூரணமான ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதாக குறிப்பிட்டார்கள். அக் கருத்தினையே ஐக்கிய மக்கள் சக்தியின் அநேகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுள்ளதாகவும் ஞாபகப்படுத்தினார்கள்.
அவர்களின் கருத்துக்களை செவிமடுத்த அவர் " நாடு முகம் கொடுத்துள்ள பாதிப்பிலிருந்து மீள வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றாக இணைந்து பொதுவான கொள்கையில் வேலை செய்ய வேண்டிய காலம் உருவாகியுள்ளது.
அரசியலமைப்பின் 24வது சரத்தின் படி அரச கொள்கைகள் மற்றும் நெறிமுறைகள் என்னும் இரண்டு பக்கங்களும் தற்போது மாற்றப்பட வேண்டும்.
அதன் காரணமாக அவரவருக்கு தேவையான விதத்தில், அரசியல் கட்சிகளுக்கு தேவையான விதத்தில் கொள்கைகளை மாற்றமுடியாது. இந்த தவறை கண்டு தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 25வருடங்களுக்கு மாற்ற முடியாத கொள்கை கட்டமைப்பொன்றை தயாரிப்போம் என்று கூறுகின்றார்.
கொள்கைகளின் தொகுப்பை செயல்படுத்துவதற்கு அரசியல் அமைப்பில் "அரச தேசிய கொள்கைகளும் நெறிமுறைகளும் " என்னும் இரண்டு பக்கங்களுக்கும் பொறுப்புக் கூறல் இல்லை.
கொள்கைகள் உள்ளன, செய்தாலும் ஒன்று செய்யாவிட்டாலும் ஒன்று. யாருக்கும் எதுவும் நடக்காது அவ்வாறென்றால் அரசியலமைப்பில் எமது நம்பிக்கை திருத்தப்பட வேண்டிய முக்கிய பக்கங்கள் தான் அரச தேசியக் கொள்கையும் நெறிமுறையும்.
அதை செயல்படுத்தாவிட்டால் அதற்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுப்பது? அரசியல்வாதிகள் மேடையில் பொய்யாக குரல் எழுப்பி பொய்யான செய்திகளை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? ஏற்றுக்கொள்ள முடியாதா? இதோ இந்த தேசிய கொள்கையும் நெறிமுறையும் என்ற பக்கங்களை மாற்றி தேசிய கட்டமைப்பு அல்லது தேசிய இணக்கப்பாட்டுக்கு வந்தால் ஜப்பான் போன்று ஒரு பிரதமர் சென்ற பின் புதிய பிரதமர் வந்தாலும் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாது.
இந்தியாவில் அரசாங்கங்கள் வருகின்றன, போகின்றன. ஜப்பானில் ஐந்து வருடங்களுக்கு மூன்று நான்கு பேர் பிரதமராகிறார்கள்.
ஆனால் அவர்களின் கொள்கை அவ்வாறே பயணிக்கின்றன. அப்படி என்றால் இலங்கைக்கும் தற்போது இளைஞர்கள் கூறுவது போன்று சிஸ்டம் சேஞ்ச் ஒன்று அவசியமாகும்.
அந்த சிஸ்டம் சேஞ்ச் தான் அரசியல்வாதிகள் பொய்யாக குரல் எழுப்புவதை நிறுத்தி நாடு ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டங்களை செயல்படுத்துவது. அதை செயல்படுத்தினால் தான் தவறான விடஙங்களை திருத்திக் கொள்ள முடியும்." என அவர்களிடம் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.10க்கு சியத தொலைக்காட்சி அலை வரிசையில் "சுழிய" நிகழ்ச்சியிலும் புதன்கிழமை இரவு 10மணிக்கு தேசிய தொலைக்காட்சியினூடாக ஒளிபரப்பாகிய பொதுமக்கள் தினம் நிகழ்ச்சியிலும் வஜிர அபேவர்த்தன கலந்து கொண்டார்.
இந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட வஜிர அபேவர்தன இலங்கையில் தற்போதைய நிலைமை மற்றும் நாட்டை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்து வரும் தூரநோக்கு வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் உள்ளூர் மற்றும் சர்வதேசத்தில் உள்ள இலங்கையர்களால் பாராட்டப்பட்டுள்ளது.
தேசிய தொலைக்காட்சி பொதுமக்கள் தின நிகழ்ச்சியில் வஜிர அபேவர்தன கருத்து தெரிவிக்கும் போது " ஜனநாயகம் மூலம் நாட்டில் வளர்ச்சியை எதிர்பார்ப்பதானால் சட்டம் மற்றும் சமாதானம் மிகவும் முக்கியமாகும். சட்டத்தில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால் அவற்றை முற்றாக மாற்ற வேண்டியுள்ளது. இந்நாட்டு மக்கள் அனைவரும் சமமாக சுதந்திரமாக வாழக்கூடிய நாடொன்று உருவாக வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத் தன்மை கொண்ட தலைவராவார். அதனால் இந்தப் பணியை அவராலேயே வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் . நான் எவ் வேளையிலும் கேட்கும் கேள்வி ஒன்று ரணில் விக்ரமசிங்கவை விட உயர்வான தலைவர்கள் உலகில் வேறு எவரேனும் உண்டா என்பதாகும்.
ஒருமுறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவருடன் சீனாவுக்கு சென்றேன்.
அவர் பேசுவதற்கு முன்னர் சபையில் சீன ஜனாதிபதி உரையாற்றினார். சீன ஜனாதிபதி தனது உரையை சுருக்கமாக முடிப்பதற்கு முன்னர் கூறுகிறார் இங்கு என்னை விட சீனாவை பற்றி நன்றாக அறிந்த ஒருவர் இருக்கின்றார். அவருக்கு என்னை விட உலகைப் பற்றிய அறிவு உள்ளது. அது வேறு யாருமல்ல அவர்தான் ரணில் விக்ரமசிங்க என கூறி அவர் சபையில் உரையாற்ற சந்தர்ப்பத்தை வழங்கினார். இலங்கை மக்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இணையான தலைவர் ஒருவர் உலகில் இருக்கிறாரா என இலங்கையர்கள் ஆராய வேண்டும்.
உலகில் ஏனைய நாடுகள் பலம் பொருத்தியதாக இருந்தாலும் இலங்கை இன்று இந் நிலைமைக்கு ஆளாகியுள்ளது இலங்கையர்களின் எண்ணங்களினாலாகும். ஆனால் அதனை மாற்றுவதற்கு இயற்கையே தற்போது சந்தர்ப்பம் ஒன்றை பெற்றுக் கொடுத்துள்ளது.
இலங்கை மக்கள் அனைவரும் மிகவும் சிந்தித்து செயலாற்றினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்நாட்டை நிச்சயமாக உலகில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வார். அரசியல்வாதியாக எனக்கு அதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மூலம் நாடு முன்னோக்கி செல்லும் என்பதை இலங்கை மக்கள் வெகு விரைவில் புரிந்து கொள்வார்கள் என எண்ணுகிறேன்.
தமிழில் வீ.ஆர்.வயலட்