ஜாமியா நளீமிய்யா கலாபீட முதல்வராக அகார் மொஹம்மத் நியமனம் | தினகரன் வாரமஞ்சரி

ஜாமியா நளீமிய்யா கலாபீட முதல்வராக அகார் மொஹம்மத் நியமனம்

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வராக அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கலாபீட பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் (11) நளீமிய்யா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார்.

பல தசாப்தங்களாக இந்நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவுக்குப் பின்னர் பணிப்பாளர் பதவி வெற்றிடமாக இருந்தது. இதனையடுத்தே, கலாபீடத்தின் முதல்வராக உஸ்தாத் அகார் முஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் எனும் பதவி, புதிய கட்டமைப்பின் கீழ் கலாபீடத்தின் தலைமை நிர்வாகப் பதவியாக அமைகின்றது.

கலாபீடத்தின் கல்வித்துறைக்கு பொறுப்பான பணிப்பாளராக அஷ்ஷெய்க் ஸீ. ஐயூப் அலியும் நிர்வாகத்துறைக்குப் பொறுப்பான செயலாளராக ஜனாப் எம்.ஐ.ஏ. இம்தாத் அலியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனங்களும் பரிபாலன சபைத் தலைவரால் வழங்கப்பட்டன.

கலாபீடத்தின் பல்வேறு துறைகளுக்கும் பிரிவுகளுக்கும் பொறுப்பான தலைவர்களின் நியமனங்களும் இந் நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

கலாபீடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் குருணாகலையை பிறப்பிடமாகவும் மாவனெல்லையை வசிப்பிடமாகவும் கொண்டவர். நளீமிய்யா கலாபீடத்தின் பழைய மாணவர் என்பதோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.

அஜ்வாத் பாஸி

Comments