இந்திய வர்த்தகர்கள் இருவர் நேற்றுக் காலை சுமார் 18மில்லியன் ரூபா பெறுமதியான 1.2கிலோ கிராம் தங்கத்தை கொண்டு வர முற்பட்ட போது சுங்க அதிகாரிகள் குழு அவர்களை கைது செய்துள்ளது.
இவர்கள் 28மற்றும் 36வயதுடையவர்கள் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருவரும் அடிக்கடி இந்தியாவுக்குச் சென்று வருவது தெரியவந்தது. அவர்கள் இண்டிகோ விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கையிருப்பில் இருந்த நகைகளை காலணி மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்தனர்.
அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியில் வெள்ளி முலாம் பூசப்பட்டிருந்தது.