இலங்கையில் பிஸ்கட் சொக்லேட் ஜஸ் கிரிம் (இனிப்புப் பண்டங்கள் )உற்பத்தி செய்யும் கம்பனிகள் (மெலிபன், இட்னா , எலிபன்ட். உஸ்வத்த, லிட்டில் லயன் உஸ்வத்த போன்ற நிறுவனங்கள் இணைந்து Lanka Confectionery Manufacturers Association நிறுவியுளளனர்.
லிட்டில் லயன் கம்பனியின் பிரதான நிறைவேற்று அதிகாரியும் இச் சங்கத்தின் தலைவருமான எஸ்.எம்.டி.சூரியகுமார தலைமையில் இம்மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் இச் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சானாஸ் ரவுப் ஹக்கீமும் கலந்து கொண்டிருந்தார்.
திடிரென பிஸ்கட் உற்பத்திகள் விலை ஏற்றுவதற்கான முதன்மை காரணம் இலங்கையில் டொலர் பெறுமானம் அதிகரித்தமைதான். 4மாதங்களுக்கு முன் சீனி ஒரு கிலோ 100ருபாய் தற்பொழுது சீனி 320 , ரூபாவாகும். ஒரு முட்டை 60ருபா, கோதுமை மா விலையேற்றம், டீசல், பெற்றோல் விலை ஏற்றம், மின்சாரம் துண்டிப்பு எரிபொருள் இல்லாமை அத்துடன் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு வங்கிகளின் எல்.சி முறை இல்லாமை என்பனவே காரணமாகும். பிஸ்கட்டுகளை கொண்டு செல்லும் லொறிகள் வேன்களுக்கு டீசல் இல்லாமை, டீசல் விலை ஏற்றம், போன்ற பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.
இதனைக் காரணம் காட்டி சில சமூக ஊடகங்கள் எமது நாட்டு பிஸ்கட் விலையேற்றம் என எங்களுக்கு சேறு பூசுகின்றனர். இந்த விளம்பரத்தினால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் எங்களது கம்பனிகளை மூட வைத்துவிட்டு வேறு நாட்டின் பிஸ்கட் கம்பனிகளை இலங்கைக்குள் கொண்டு வரு முயற்சிக்கின்றார்களா ? இவர்களது நோக்கம் என்ன வென்று எங்களுக்கு தெரியவில்லை. எங்களது கம்பனிகளை மூட வைப்பதற்கான நோக்கமோ தெரியாது.
ஆனால் பிஸ்கட் 100 ருபாவில் இருந்து 271 ருபாவுக்கு மட்டுமே விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் 50 நாடுகளுக்கு எங்களது பிஸ்கட்டை ஏற்றுமதி செய்து இந்த நாட்டுக்கு வருடாந்தம் 150 மில்லியன் டொலரை கொண்டு வருகின்றோம். எங்களது பிஸ்கட் கம்பனியில் தற்பொழுது கூட 50 ஆயிரம் பேர் தொழிலை இழந்துள்ளனர்.
(அஷ்ரப் ஏ சமத்)