கம்பஹா பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 06சந்தேக சபர்கள் (26) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 06ஆம் திகதி கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் உட்பட சந்தேக நபர்கள் 06பேர் கொனஹென விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23, 24, 26, 29மற்றும் 39வயதுடையவர்களெனவும் அவர்கள் பெதியகொட, மாகேவிட மற்றும் கொடுகொட பிரதேசத்தை சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் காரொன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொனஹென விசேட அதிரடிப்படையினர் மற்றும் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் .