156வது பொலிஸ் தினம்; பொலிஸ் சேவை கடந்து வந்த பாதை... | தினகரன் வாரமஞ்சரி

156வது பொலிஸ் தினம்; பொலிஸ் சேவை கடந்து வந்த பாதை...

156ஆவது பொலிஸ் தினம் நேற்றாகும்.  அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.

இலங்கையில் பொலிஸ் சேவையானது இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டது. இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபராக ஜீ. டப்ள்யு. ஆர். கெம்பல் 1866ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி அரசியலமைப்பு ரீதியாக பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்ட திகதியையே பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்ட தினமாகக் கருதி 156வது பொலிஸ் தினமாக இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றது.  

வரலாற்று ரீதியான பிரதிபலிப்பும் நிறுவன வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாகும். சிறந்த நன்மதிப்பு மற்றும் பொது மக்களின் வளர்ச்சிக்காக உறுதுணையாக நிற்கும் பொலிஸ் சேவையானது பொலிஸ் வரலாற்று தகவல்களை கட்டியெழுப்புவதில் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இச் சேவையானது வரலாற்று ரீதியாக ஆராயப்பட வேண்டும் என்பதுடன், வெறும் வரலாற்றுப் பதிவை மாத்திரம் செயல்படுத்துவதற்காக மாத்திரமல்லாது குறைபாடுகளை அடையாளம் காண்பதற்காகவும், எதிர்காலத்தை அமைத்து கொள்வதற்காகவும், கடந்தகால ஆய்வுகளுக்கும் உதவியாகவும் இருக்கின்றது.  

கடலோரப்பகுதிகளை ஒல்லாந்தர்கள் ஆக்கிரமித்தபோது 1650ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி கொழும்பு நகர சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி கொழும்பு நகரில் வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக, இரவு நேரங்களில் நகரத்தை பாதுகாப்பதற்காக நான்கு சிப்பாய்களை அமர்த்தியமை இலங்கை பொலிஸ் சேவையின் தோற்றத்திற்கான ஆதாரங்களில் ஒன்றாக பிரதிபலிக்கின்றது.  

கொழும்பு நகரத்தில் பொலிஸ் சேவைக்காக ராணுவ சிப்பாய்களும், கோட்டை பிரதேசத்தில் ஒல்லாந்த சிப்பாய்களும், புறக்கோட்டை பிரதேசத்தில் மலாய் இனத்தவர்களின் பொலிஸ் கூலி சிப்பாய்களும் கடந்த காலத்தில் பொலிஸ் சேவையில் ஈடுபட்டனர்.  

1806ஆம் ஆண்டளவில் ஆங்கில இனத்தவர்களால் கொழும்பு நகரத்துக்கு வெளியே பொலிஸ் சேவையை புரிவதற்காக கட்டளை சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் 1833வது ஆண்டளவில் அரசின் கொடுப்பனவுடன் பொலிஸ் சேவையை ஆரம்பித்தனர்.  கொழும்புக்கான  பொலிஸ் அதிகாரியாக தோமஸ் நியமிக்கப்பட்டார். அப்போது கொழும்பு நகரில் உள்ள 39000மக்களுக்கு பொலிஸ் சேவையை புரிவதற்காக 165பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்றை கடமையில் ஈடுபடுத்தினார்கள்.  

1843ஆம் ஆண்டில், அக் காலத்தில் அமுலில் இருந்த பொலிஸ் கட்டளைச் சட்டத்தை ரத்து செய்து நாடு முழுவதும் சகல நகரங்களுக்கும் பொலிஸ் நிலையங்களை நிறுவுவதற்காக ஆளுனருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 1843ஆம் ஆண்டு பொலிஸ் பரிசோதகர் தரத்தை அறிமுகப்படுத்தி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததுடன், பொலிஸ் உதவியாளர் பதவியை ரத்து செய்து பொலிஸ் கான்ஸ்டபிள் பதவியை அறிமுகப்படுத்தினர். 1863ஆம் ஆண்டின் இறுதியில் 48பொலிஸ் நிலையங்களை நிறுவப்பட்டதுடன், 1867ஆம் ஆண்டின் போது மருதானையில் முஸ்லீம் பள்ளிக்கு அருகாமையில் பொலிஸ் தலைமையம்  ஸ்தாபிக்கப்பட்டது. சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பதாக இலங்கையின் முதலாவது பொலிஸ் மா அதிபராக சேர் ரிட்சட் அலுவிகாரை  1947ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் இந் நாட்டின் 11வது பொலிஸ் மா அதிபராவார்.  

1948ஆம் ஆண்டில் சுதந்திரம் கிடைத்த பின்னர் இந் நாட்டில் ஏற்பட்ட சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களினால் எளிமையான முறையில் இப் பொலிஸ் திணைக்களத்தை மாற்றியமைத்ததுடன் நாடு பூராகவும் பொலிஸ் நிலையங்களை அதிகரித்து அதன் கடமைகளை வெவ்வேறு வழிகளில் ஆரம்பித்தனர்.  

பொறுப்புள்ள அரசாங்கத்தினால் பொது மக்களின் சகல பொறுப்புகளையும் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட பிரதான நிறுவனங்களில் பொலிஸ் துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. அதனால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் ஏற்படும் தடைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் மக்கள் பொலிசாரிடமிருந்து விலகிச் செல்வது வழக்கமானதாகியது. ஆனாலும் பொலிஸ் சேவையின் போது மக்களின் தொடர்புகள் மிகவும் முக்கியமானதாகும்.  

அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகல போராட்டங்கள், கலவரங்களுக்கு நேரடியாக முகம் கொடுப்பது பொலிசாராகும். 1971ஆம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் அரச விரோத கிளர்ச்சியாளர்களினால் பொலிசாருக்கே முதலாவதாக தாக்குதல் நடாத்தப்பட்டது. இராணுவ பண்புகள் இல்லாமல் உருவாக்கப்பட்ட பொலிசார் துப்பாக்கியேந்தியவாறு கடமைகள் மேற்கொள்ள வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டமைக்கு இவ்வாறானவை காரணங்களாகும். எல்.ரீ.ரீ.ஈ யுத்தகாலத்தில் அது தீவிரமாக இருந்தது. தற்போதைய காலத்தில் ஏற்பட்ட போராட்டத்தினால் மீண்டும் ஒருமுறை இவ்வாறான சந்தர்ப்பத்தை காணமுடிந்தது.  

புதிய பொலிஸ் நிலையங்கள் ஆரம்பித்தல்.  

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன பொலிஸ் துறையை மறுசீரமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி பொலிஸ் நிருவாகத்தில் புதிய கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கட்டமைப்பின்படி 45பிரதேச பொலிஸ் பிரிவுகள் மற்றும் 77செயல்பாட்டு பொலிஸ் பிரிவுகளின் கடமைகளுக்காக தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 107000ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.  

குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை 05பிரிவுகளாக பிரித்து சேவையை விரிவுப்படுத்தியுள்ளது. அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பணிப்பாளர்கள் ஐவரின் கீழ் விசாரணை கோப்புகள் மற்றும் விசாரணை செய்யப்படும் முறைப்பாடுகளின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தி புதிய பிரிவுகளின் மூலம் விசாரணை செய்யப்படும். அவ்வாறு புதிதாக உருவாக்கப்பட்ட பிரிவுகளின் பெயர்கள்.  

 சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்ற விசாரணை பிரிவு  

 கணனி குற்றவியல் விசாரணை பிரிவு  

 நிதி மற்றும் வணிக குற்றப் பிரிவு  

 மனித கடத்தல், கடலாசார் குற்ற விசாரணை பிரிவு  

 மனித படுகொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணை பிரிவு

எனப் பெயரிடப்பட்டுள்ளது.  

மனித வள முகாமைத்துவ பிரிவு 

பெண் உத்தியோகத்தர்களை சமமாக மதித்தல்,   ஆண் பெண் சமூகத்தவர்களை சமமாக பேணுவதன் ஊடாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி பதவிகள், பிரிவுக்கு பொறுப்பான மற்றும் பிராந்தியங்களுக்கு பொறுப்பான உத்தியோகத்தர்களாக ஆக்குவதற்கான சந்தர்ப்பங்களை வழங்கியது வரலாற்றில் முதலாவது தடவையாக பெண் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுளளதுடன், அவர்கள் பொலிஸ் மா அதிபர் வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது இலங்கை பொலிசில் 04பெண் பிரதி பொலிஸ் மா அதிபர்களும், 04பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும், 13பெண் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும், 1149பரிசோதகர்கள் தரத்திலான பெண் உத்தியோகத்தர்களும், 9464பெண் பொலிஸ் சாஜன்ட் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தரத்திலான உத்தியோகத்தர்கள் அடங்கிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடு பூராகவும் சகல பிரதேசத்திலும் ஆண் உத்தியோகத்தர்களுக்கு நிகராக வியக்கதக்க வகையில் பொலிஸ் கடமைகளை முன்னெடுக்கின்றார்கள். பெண் உத்தியோகத்தர்களுக்கு சிறந்த மனநிலைமையில் கடமையாற்றுவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு, மேலதிக வசதிகள்செய்து தரப்பட்டுள்ளன.   நாடு பூராகவும் உள்ளடக்கியவாறு தற்போது நடைமுறையில் உள்ள 605பொலிஸ் நிலையங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் நிறுவப்பட்டுள்ளதுடன் 45பிரிவுகளுக்கு பொறுப்பான குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் நிறுவப்பட்டுள்ளது. விசாரணை பிராந்தியம் மற்றும் தடுப்புப் பிராந்தியங்களாக இப் பணியகம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு  

நீண்ட காலமாக பொலிஸ் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் கிடைக்காதமைக்கு தீர்வாக பதவி உயர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்காக 2019ஜனவரி மாதம் 01ஆம் திகதி , 2019ஜூலை மாதம் 01ஆம் திகதி, 2020பெப்ரவரி மாதம் 08ஆம் திகதிகளில் பல்வேறு பதவிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பொலிஸ் சேவையில் 31541உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் 927உதவிச் சேவையினர்களுக்கும் 490விஷேட அதிரடிப்படையினர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  

குற்றங்கள் பதிவாதல் மற்றும் தீர்த்தல்  

2018ஆம் ஆண்டில் 36354  குற்றங்கள் பதிவாகியதுடன் அவற்றில் 28246  குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வருடத்தில் 78வீதமான குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் 34578பெருங் குற்றங்கள் பதிவாகியதுடன் அவற்றில் 25611குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வருடத்தில் 74வீதமான குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டில் 31098பெருங் குற்றங்கள் பதிவாகியதுடன் அவற்றில் 24412குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வருடத்தில் 79வீதமான குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டில் 35412பெருங் குற்றங்கள் பதிவாகியதுடன் அவற்றில் 28122குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வருடத்தில் 79வீதமான குற்றங்கள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

வாகன கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு  

வாகன கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பை மேற் கொள்ளும் பொலிசார் கடமையின் போது மக்களின் எதிர்ப்புக்கு உள்ளகின்றனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களினால் ஏற்படுகின்ற வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் தேவை ஏற்படுகின்றது.  தவறுகள் மற்றும் வாகன விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்கும் குற்றம் இழைக்கப்பட்டவர்களுக்காக தடைவிதித்தல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதனால் அரசுக்கு பெருந் தொகையான நிதி அறவிடப்படுகின்றது. போதை பொருள் பாவனை செய்யும் மக்களை விட போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதே அதிகளவில் பதிவாகியுள்ளது. அதற்கு காரணம் இன்னும் நமது நாட்டில் ஹெரோயின், மொப்பின், ஐஸ் போன்ற போதை பொருட்களை பாவித்து போதையிலிருக்கும் நபர்களை கைது செய்வதற்கு நிரந்தர தீர்வு மற்றும் சட்டமின்மையாகும்.   வருடமொன்றுக்கு பொலிசாரால் செய்யப்படும் கடமை மூலம் அரசுக்கு நிதி சேகரித்து வழங்கப்படுகின்றது.  

போக்குவரத்து குற்றங்கள், கலால் வரி குற்றங்கள், போதை ஒழிப்பு சுற்றிவளைப்புகள். போதை பொருள் தொடர்பான குற்றங்கள், சுங்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் சுற்றிவளைப்புகள், விபத்துகள், இசைவுச் சான்றிதழ் அனுமதி பத்திரங்கள் விநியோகித்தல், பிரதிகளுக்கான நிதி பெற்றுக் கொள்ளல், ஒலி பெருக்கிகளுக்கான அனுமதி வழங்குதல், என்பவற்றின் மூலம் நிதி விதிமுறைகளின் படி அரசுக்கு ஒவ்வொரு வருடமும் அதிக அளவிலான வருமானம் பெற்று கொடுக்கப்படுகின்றது.   இலங்கை பொலிசாரால்  சில சந்தர்ப்பங்களில். மக்களால் எதிர்பார்க்கப்படும். ஆயிரம் சேவைகளில். ஓரிரு சேவையை நிறைவேற்ற முடியாமல் போகும். சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடுகின்றது.   தற்போது காணப்படும் சமுதாய பொருளாதார, சூழலில் அமைதியை பாதுகாப்பது, குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது கட்டுப்படுத்துவது, போன்ற கடமைகளுடன் காலத்துக்கு காலம் ஏற்படும் மாற்றங்களுடன் கூடிய பொறுப்பு அளிக்கப்படும் பல்வேறு சவால் மிகுந்த கடமைகள் அதில் முக்கியமாக காணப்படுகிறது.   அவ்வாறான சவால்கள் தொடர்பான தெளிவுடன் 156வது பொலிஸ் தினத்தில் நமது பொலிஸ் வரலாற்றை தெரிந்து கொள்வதுடன், தற்கால பொலிஸ் சேவையின் பண்புகளையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

பொலிஸ் ஊடகப் பிரிவு

 

Comments