பேராதனை பல்கலைக்கழகத்தில் 1997 ஆம் ஆண்டில் பொறியியல் பீட மாணவராக இருந்த செல்வநாயகம் வரப்பிரகாஷை கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
பிரதான சந்தேக நபரான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரனின் இருப்பிடம் தெரியாததால், அவரை கைது செய்ய பிடியாணை உத்தரவை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர், என்றும் அவர் மீது மனிதாபிமானமற்ற முறையில் பகிடிவதை மேற்கொள்ளப்பட்டதால் அவர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரேத பரிசோதனையின் போது, உடல் உழைப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தசைக் காயம் காரணமாக ஏற்பட்ட கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு மரணத்துக்குக் காரணமென சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
அவர் அதிக உடல் பயிற்சிக்குட்படுத்தப்பட்டதன் காரணமாக உட்காயங்கள் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே மாணவன் உயிரிழந்தார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.