உலகின் முன்னணி சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வர்த்தக நாமத்தின் தயாரிப்பு சிறப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் (SLIM) 2022 SLIM Brand Excellence Awards விருது வழங்கும் நிகழ்வில் Dettol இரண்டு மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த தயாரிப்பு வர்த்தக நாமத்திற்கான தங்க விருது மற்றும் Dettol தனது தயாரிப்புகளுக்கு இந்த ஆண்டின் உலகளாவிய வர்த்தக நாமத்திற்கான வெண்கல விருதும் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளை பராமரிக்கவும் மேம்படுத்தவும் எடுத்த முயற்சிகளுக்காகவும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த Dettol வர்த்தக நாம முகாமையாளர் லிலானி ராஜபக்ஷ கூறுகையில், “கடந்த சில வருடங்கள் நம் அனைவருக்கும் சவாலான ஆண்டுகளாக இருந்தன.
எவ்வாறாயினும், Dettol மிகவும் பாராட்டத்தக்க இரண்டு சாதனைகளுடன் அங்கீகரிக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களை முதன்மைப்படுத்தும் எங்கள் பார்வைக்கும், உண்மையான வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கண்டறிந்து Dettol இன் தயாரிப்பு வழங்கலை தொடர்ந்து வளர்ப்பதற்கான எங்கள் கூட்டுப் உட்பார்வைக்கும் ஒரு உண்மையான சான்றாகும்.” என்றார்.