![மோடியின் ஆறுதல்: அரசியலும் கலந்ததா?](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2016/12/12/n24.jpg?itok=osYniicg)
ம. கோமகன்
![]() |
|
குழந்தையாக மாறிப்போன பன்னீர் | |
நாங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் ஏறியபோது 4 ஆம் திகதி மாலை. அச்சமயத்தில் வலுவிழந்து போன நாடா புயல் பற்றியும் இன்னொரு புயல் வங்காள விரிகுடாவில் உருவாகும் என்ற செய்தியும் தான் தமிழகத்தைப் பற்றியதாக இருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி எந்த விசேஷ செய்தியும் இருக்கவில்லை.
நாங்கள் மதுரை விமான நிலையத்தில் இறங்கியபோது ஒரு இறுக்கமான சூழலை அவதானித்தோம். வெளியே வந்தபோது எம்மைக் கூட்டிச் செல்ல வந்திருந்த வாகன சாரதி இறுக்கமான முக பாவனையுடன் தான் எம்மிடம் வந்தார். “என்ன ஒரு மாதிரியாக இருக்கிறதே, கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருக்கிறார்களே!” என்று அவரிடம் நான் கேட்டேன். வாருங்கள் வாருங்கள் என்று எங்களை அழைத்துச் சென்று வாகனத்தில் பெட்டிகளையும் எங்களையும் அடைத்த பின்னர் சாரதி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
“சார், அம்மா இறந்து விட்டதாக செய்தி பரவி இருக்கிறது. அதுதான் பதற்றமாக இருக்கிறார்கள். சி. எம். இறக்கவில்லை. மாரடைப்புதான்” என்றார் சாரதி. நாங்கள் கோயம்புத்தூரூக்கு பயணமாக வேண்டும். சி. எம். இறந்துவிட்டதாகத் தகவல் பரவினால் எங்கள் வாகனத்தை அ.தி.மு.க. தொண்டர்கள் வழிமறிக்கவும் தாக்கவும் கூடும் என்பதை எண்ணி ஒரு கணம் ஆடிப்போனேன். உண்மையில் அது மாரடைப்பாகவே இருக்கட்டும் என எண்ணினேன். என்னுடன் வந்த பேராசிரியர் சும்மா இருக்கிறார் இல்லை. “கடந்த ஐம்பது நாட்களாக மிக மோசமானதும் சிக்கலானதுமான உடல் நிலையில் இருந்துவரும் ஒரு நோயாளிக்கு சகல வசதிகளுடனான சிகிச்சையின் போது எப்படி
![]() |
|
அம்மாவின் மீது அன்பு செலுத்த மட்டுமே இவர்களுக்கு தெரிந்தி ருக்கிறது. |
மாரடைப்பு வரும்? அவ்வாறு மாரடைப்பு வருமானால் அது ஆளைக்கொண்டு போகத்தான் வரும்!” என்று வியாக்கியானம் செய்ய ஆரம்பித்தார்.
சாரதியும் தனது பங்குக்கு அலைபேசி இணைய தளத்திலும், தொலைக்காட்சி செனல்கள் வழியாகவும் ‘அப்டேட்’டுகளைத் துலாவத் தொடங்கினார். ஜெயலலிதா என்றாலே மர்மம் தானே! அவர் சோபன் பாபுவை திருமணம் செய்தாரா என்பது மர்மம். அவருக்கு குழந்தை பிறந்ததாக ஒரு செய்தி ஒரு சமயத்தில் உலவியது. அதுவும் மர்மம் தான் எம். ஜி. ஆருக்கும் அவருக்கும் இடையிலான உறவும் மர்மம்தான். சசிகலாவுக்கும் இவருக்கும் இடையே இப்படி ஒரு இறுக்கமான நட்பு உருவானது ஏன், எப்படி என்பதும் மர்மம் தான். அமைச்சர்களாலும் மக்களாலும் அவரை சந்திக்க முடியாது. அவருக்கு வந்த நோய் என்ன என்பதும் மர்மம். எதற்காக அவர் அபல்லோவில் சேர்க்கப்பட்டார் என்பதும் மர்மம்.... எப்படி மரணம், எத்தனை மணிக்கு மரணம் என்பதும் மர்மமே!
மதுரையில் இருந்து புறப்பட்டு பழனி, திண்டுக்கல், பொள்ளச்சி வழியாக கோயம்புத்தூர் நோக்கி பயணித்தபோது இன்னொரு செய்தி காதில் விழுந்தது.
தமிகக ஆளுனர் அபல்லோ மருத்துவமனைக்கு சென்றிருப்பதாகவும் அமைச்சர் பன்னீரும் ஏனைய அமைச்சர்களும் அங்கு குழுமியிருப்பதாகவும் அந்தத் தகவல் சொன்னது. மக்கள் ஆஸ்பத்திரிக்கு முன்பாகத் திரள்வதாகவும் தடைகளை உடைத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைய முயல்வதாகவும் கேள்விப்பட்டு கலவரமானோம். பக்கத்தில் இருந்த பேராசிரியர், “எம். ஜி. ஆர். ஆஸ்பத்திரியில் இருந்தபோதும் இப்படித்தான் ஆஸ்பத்திரியை தாக்க முனைந்தார்கள்” என்று கிலியை கூட்டினார்.
பின்னர் இன்னொரு செய்தி. அம்மாவுக்கு அவசர சந்திர சிகிச்சை செய்வதற்கு உறவினர் ஒருவரின் கையெழுத்து வேண்டும். இங்கே நண்பி என்ற வகையில் சசியின் கையெழுத்து செல்லாதாம். இதனால்தான் ஆளுநர் வந்து கையெழுத்து போட்டார் என்றும் இனி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த செய்தி சொன்னது. பேராசிரியரோ, அம்மாவின் கதை முடிந்துவிட்டது என்றும் அதை மறைக்க நாடகமாடுகிறார்கள் என்றும் சொல்லிக்கொண்டு வந்தார்.
சில நிமிடங்கள் கழிந்து இன்னொரு தகவல் கசிந்தது. ஆளுநர் அவசர அவசரமாக அபல்லோவுக்கு வந்ததற்கான காரணம் சத்திரசிகிச்சைக்கு கையெழுத்துப்போடவல்ல, மாநில முதல்வரின் மரணத்தை நேரில்பார்த்து உறுதிப்படுத்தவே வந்து சென்றார் என்ற செய்தி நம்பக்கூடிய மாதிரி இருந்தது. மேலும் மரணத்தையடுத்து இறுதிக் கிரியைகளுக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டதாகவும் வாகன சாரதி சொன்னார்.
இப் பதற்றத்துக்கு மத்தியில் அபல்லோவுக்குள் அமைச்சர்களைத் தவிர வேறு எவரையும் அனுமதிக்கவில்லை. சாதாராண மக்கள் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் குழம்பிப் போனார்கள். வழிநெடுக மக்கள் தெருக்களில் கூடி நின்று பேசிக்கொண்டிருப்பதையும் கடைகள் இழுத்து மூடப்பட்டுக்கிடப்பதையும் பார்த்தேன். வெறிச்சோடிக் கிடந்த அகலமான சாலையில் நாம் மாத்திரம் பயணித்துக் கொண்டிருந்தோம்.
சாலையோர வீடுகளில் மக்கள் தொலைக்காட்சிகள் முன்பாகக் கூடி நின்று பார்த்துக் கொண்டிருந்ததையும் அவதானித்தோம்.
அன்றிரவு கோவை போய்ச் சேர்ந்தோம். மறுநாள் திங்கட்கிழமை அம்மாவுக்கு என்ன நடந்தது என்பது நிச்சயமாகத் தெரியாததால் சாலைகளில் பதற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. அ. தி. மு. க சட்டசபை குழு கூடி அடுத்த கட்டம் பற்றி பேசப்போவதாக செய்தி வந்தது. பின்னர் எமக்கு வந்த இன்னொரு தகவல் எம்மை குழப்பத்தில் ஆழ்த்தியது. சென்னை ராஜாநி மண்டபத்துக்கு முன்பாக ஒரு வெட்ட வெளி உண்டு. அங்கே இரும்பு குழாய்கள் நாட்டப்பட்டு வரிசைகள் அமைக்கப்படுவதாகவும் மண்டபத்தில் ஆயத்த வேலைகள் நடப்பதாகவும் வெளியான செய்தி, சி. எம். மின் மரணத்தை உறுதிப்படுத்துவதாகவே எமக்குப்பட்டது. ஒரு வதந்தி, மரணச் செய்தி இரவு 11.30 அளவில் வெளிவரும் என்றது.
இறந்து போனதை அறிவிக்காமல் நாடகம் ஆடுகிறார்கள் என்று சிலர் ஆவேசமடைந்தனர். ஒருவர், செத்துபோய் ஒரு நாள் ஆகிவிட்டது. ஏன் இந்த நாடகம் எனப் புலம்ப, என் பேராசிரிய நண்பர் நமுட்டுச் சிரிப்புடன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார். பகல் 2 மணியளவில் ஆங்காங்கே சில பஸ்வண்டிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. மூடாத கடைகள் தாக்கப்பட்டன. மக்கள் அம்மாவின் படங்களை சந்திகளில் காட்சிக்கு வைத்தனர். அம்மா இறந்துவிட்டார் என்பதை, அது அறிவிக்கப்படுவதற்கு முன்னரேயே, மக்கள் படிப்படியாக ஏற்றுக்கொள்வதாகவே எமக்குப்பட்டது.
அப்போது, அம்மா இறக்கவில்லை, நேற்றுமாலை சத்திரசிகிச்சை செய்யப்பட்ட பின் சுவாசம் குறைந்து வருவதாக ஒரு செய்தியையும், இறந்துவிட்டதாக இன்னொரு செய்தியையும் தொலைக்காட்சிகள் வெளியிட, குழப்பம் அதிகரித்தது. பின்னர் மூன்று மணியளவில் அம்மாவின் மரணச் செய்தி மறுக்கப்பட்டு அம்மா முன்னேற்றம் கண்டு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை பலரும் நம்பவில்லை. ஆனாலும் அ.தி.மு.க தொண்டர்களுக்கும் அம்மா விசுவாதிகளுக்கும் ஆறுதல் அளித்தது என்னவோ உண்மை!
ஜெயலலிதா மரணத்தை இல்லை, ஆமாம், பொய், உண்மை என்று மாற்றி மாற்றிச் சொன்னதில் ஒரு நன்மை விளையவும் செய்தது. ஏனெனில் ஏற்கனவே அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் மரணங்களில் உயிர் நாசம், சொத்து நாசம் பரந்த அளவில் ஏற்பட்டது.
அம்மா இறந்த செய்தி திடீரென வெளியானால் பலர் தீக்குளிப்பார்கள். தி. மு. க காரர்களைத் தாக்குவார்கள். பஸ்களை தாக்குவார்கள், ஊர்வலம் செல்வார்கள், உணர்ச்சி வசப்பட்டு எதையாவது செய்து கொள்வார்கள் என்பதாலேயே ஒரு துன்பச் செய்தியை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டு உணர்ச்சி கொந்தளிப்பை படிப்படியாகக் கட்டுப்படுத்தினார்கள் என்றும் சொல்ல முடியும். ஜெயலலிதாவின் மரணச் செய்தி வெளியாகி அடக்கம் செய்யப்படுவதுவரை தமிழகத்தில் எதிர்பார்க்கப்பட்டதைப்போல் வன்முறைச், சம்பவங்கள் நிகழவில்லை. எனினும் இப்போது வந்துள்ள செய்திகளின்படி 77 பேர் மரணம் அடைந்துள்ளனராம்.
தீக்குளித்தவர்கள், விரலை வெட்டி காணிக்கையாக்கியவர்கள் இவற்றில் அடக்கம், தமிழர்களின் இந்த வெறியுணர்வை புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழனுக்கு மட்டும் எங்கிருந்து இந்த வெறி வருகிறது?
இது இப்படி இருக்க, அ. தி. மு. க வுக்குள் ஒன்றுமையில்லாததால் அம்மாவுக்கு பின் யார் என்பதை பேசி அப்பிரச்சினையை தீர்ந்த பின்னரே மரணம் தொடர்பாக அறிவிப்பு வருும் என்றும் சிலர் எங்களிடம் கூறினர்.
நாங்கள் ஒரு வைபவத்தில் கலந்து கொள்ளவே சென்றிருந்தோம். அந்த வைபவத்தில் தலைமை தாங்கியவர், ஜெயலலிதாவின் மரணச் செய்தி உத்தியோகபூர்வமாக திங்கள் இரவு 11.30க்கு அறிவிக்கப்படும் என்றும் எனவே, பி. பகல் ஒரு மணிக்கெல்லாம் கிளம்பி திருச்சியை அடைவதே புத்திசாலித்தனம் என்றும் எங்களிடம் கூறினார். அவர் ஒரு அ. தி. மு. காரர். அவருக்கு எப்படியோ ஜெயின் மரணச் செய்தி தெரியவந்திருக்கிறது. நாங்களும் அரக்கபறக்க பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டு திருச்சி நோக்கி புறப்பட்டோம்.
மரணச் செய்தி வெளியாகவதற்குள் நாங்கள் பாதுகாப்பாக திருச்சியை அடைந்திருக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. இது இவ்விதம் இருக்க மாலை 4.30 மணியளவில் அம்மாவின் உடல் நிலை மோசமடைந்து வருகிறது என்று ஒரு செய்தி வெளியாகி இறக்கை கட்டியது.
இதற்கு வலு சேர்ப்பதுபோல இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலேயின் செய்தியும் வெளிவந்தது. அவர் அம்மாவின் நிலை மிக மோசமானது என்று கூறியிருந்தார்.
அம்மாவைக் காப்பாற்ற சகல முயற்சிகளும் செய்யப்பட்டு வருவதாக அப்போதும் அப்பல்லோ செய்திக் குறிப்பு கூறியது. எமக்கு எல்லாமே ஆச்சரியமாகவே இருந்தது. இரவாக இரவாக போக்குவரத்து குறைந்து ஊரடங்கு சட்டம் போடப்பட்டது போல சாலைகள் வெறிச்சோடிப் போயின. தண்ணீர் போத்தல் ஒன்றை வாங்கு வதற்குக் கூட கடை கிடைக்கவில்லை. சகல கடைகளும் மூடப்பட்டிருந்தன.
டீ குடிக்கக் கூட ஒரு திறந்த கடையைக் காணமுடியவில்லை. இப்படிப் பயணிக்க அச்சமாகவே இருந்தது. எப்படியோ நாங்கள் பத்தரைமணிக்கு திருச்சி வந்தடைந்தோம். இரவு 11.45 மணியளவில் அம்மாவின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டதும் சரியாகக் கணித்து எங்களை திருச்சிக்கு வழியனுப்பி வைத்த அந்த பிரமுகரை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன்.
இங்கே சில நியாயமான சந்தேகங்கள் எழவே செய்கின்றன.
அமைச்சர் கூட்டத்தை இரவு 11.30க்கு நடத்தவிருப்பதாக எப்படி முன்கூட்டியே தீர்மானித்தார்கள்? மரணச் செய்தி வெளியானதும் அமைச்சர்கள்கூடி அடுத்த முதலமைச்சரைத் தெரிவு செய்யும் கூட்டத்தை நடத்தி பன்னீர்செல்வத்தைத் தெரிவு செய்தனர். நடுநிசிவரை இராகு காலம் என்பதால்
(தொடர் 20ஆம் பக்கம்)