இலண்டனிலிருந்து கே. அசோக்குமார்
பொதுநலவாய தலைமைப் பதவியை பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸுக்கு வழங்க பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
1949 ஆம் ஆண்டு இரண்டாவது எலிசபெத் மகாராணியின் தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்புக்கு 1952 ஆம் ஆண்டு முதல் தலைமையேற்று வந்த மகாராணி, இலண்டனில் ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை இளவரசர் சார்ள்ஸுக்கு வழங்குவது தொடர்பில் அங்கத்துவ நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதன்படி, இளவரசர் சார்ள்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இளவரசர் சார்ள்ஸுக்கு எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது எலிபெத் மகாராணி பொதுநலவாய நாடுகளின் தலவைர்கள மாநாட்டை ஆரம்பித்து உரையாற்றம்போது, 1949 ஆம் ஆண்டு தனது தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் தலைமைபொறுப்பை 1952 ஆம் ஆண்டு தான் பொறுப்பேற்றபோது சுமார் 2.4 பில்லியன் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் விதத்தில் 53 நாடுகள் அங்கத்துவம் பெற்றதாக கூறினார்.
அத்துடன் நேற்று 21 ஆம் திகதி எலிசபெத் மகாராணியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள அரச தலைவர்களுக்கும் இராப்போசன விருந்தும் அளிக்கப்ட்டது. இந்த விருந்துபசார நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாரியாருடன் கலந்துகொண்டார்.